1. விவசாய தகவல்கள்

இளநீர் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tender Coconut prices rise - Farmers happy!

Credit : Vikatan

கோடை என்று நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது, வெப்பமும், தாகமும்தான். இவை இரண்டும் இல்லாமல் எந்த உயிரும் மண்ணில் வாழ்வது என்பது சற்று கடினமானது.

இயற்கையின் விநோதம் (The strangeness of nature)

எனினும் அதிகபட்ச வெப்பமும், தாகமும் ஏற்படும் காலகட்டம்தான் கோடை காலம். கொளுத்தும் வெயிலை, நம் முன்னோர்கள், இயற்கையான பலவிதப் பொருட்களைக் கொண்டு சமாளித்தனர்.

ஆனால் நாம், பல ரசாயனப் பொருட்கள் மீது கொண்ட மோகத்தால், எக்கச்சக்க நோய்களுக்கு ஆளாகி, ஆயிரக்கணக்கில் மருந்து மாத்திரைகளுக்கு செலவிட்டு வருகிறோம்.

நோய்களுக்கு குட்பை (Goodbye to diseases)

உண்மையில் சாதக பாதகங்களுக்கு ஏற்றவாறு, எல்லா நன்மைகளையும் தனக்குள்ளேயே பொதிந்து வைத்திருக்கிறது இயற்கை. இதனைப் புரிந்துகொண்டால், நோய்களுக்கு நாமும் சொல்லலாம் குட்பை.

அந்த வகையில், வெயிலை விரட்ட இளநீர் ஒன்று போதும் என்பது காலம் காலமாக நாம் கைகண்ட மருந்து. உடல் சூட்டை நீக்கி, நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பதில், இளநீர் இன்றியமையாதது.

பொள்ளாச்சி இளநீர் (Pollachi Young Water)

ஒவ்வொரு ஊருக்கு ஒருசில பொருட்கள் புகழ்பெற்றவை அல்லவா. அந்த வரிசையில், பொள்ளாச்சி இளநீர்தான் தமிழகத்தின் பிரபலம்.தற்போது கோடை கொளுத்தி வருவதால், பொள்ளாச்சி விவசாயிகள் இளநீரின் பண்ணை விற்பனையை ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளனர்.

இதுகுறித்து கோடை மாவட்டம் ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், கோடை வெயில் காரணமாக மக்கள் அதிகளவில் இளநீர் பருகுகின்றனர். இதனால் தமிழகம் முழுவதிலும், இளநீரின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

விலை ஒரு ரூபாய் உயர்வு (A rupee increase in price)

இந்நிலையில், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் இளநீர் வரத்து குறைவு மற்றும் தமிழகம் முழுவதிலும் தேவை அதிகரிப்பின் காரணமாக, இந்த வாரம் இளநீர் விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி (Farmers happy)

ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, ரூ.29க்கு விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப் பட்டது, எடைக்கு வழங்கினால், ஒரு டன் இளநீர், ரூ.9.750க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரம் தோறும் ஒரு ரூபாய் விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

கடும் வறட்சி எதிரொலி- வாழப்பாடியில், கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு!

கொளுத்தும் வெயில்- தாகம் தீர்க்கும் நுங்கு அமோக விற்பனை!

காளான் தாய் வித்துகள் தயாரிக்கும் எளிய வழிமுறை!

 

English Summary: Tender Coconut prices rise - Farmers happy!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.