தேனி மாவட்டத்தின் கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இலவம் பஞ்சு எடுக்கும் சீசன் தொடங்கியது.
பருத்தி ஆடைகள் (Cotton dresses)
கோடைக்கு ஏற்ற ஆடை என்றால் அது எப்போதுமே பருத்தி ஆடைகள். அணிந்தால் அணிபவருக்கு ஆரோக்கியத்தையும், பார்ப்பவர் கண்களுக்குக் கூடுதல் அழகையும் அளிப்பதில், பருத்திக்கு நிகரே இல்லை எனலாம்.
பஞ்சு வெடிக்கும் காலம் (Cotton bursting period)
இந்த பருத்திக்கும் கோடைக்கும் நீண்ட நெடியத் தொடர்பு உண்டு. அது என்னவென்றால், கோடை காலம் வந்தால்தான், பல மாதங்கள் பக்குவமாக விளைவித்த பருத்தியின் முக்கிய நிகழ்வான வெடித்துச்சிதறி பஞ்சு வெளிப்படும் நேரம் வரும்.
அந்த வகையில், தற்போது, கோடைகாலம் என்பதால், சாகுபடி செய்யப்பட்ட இடங்களிலெல்லாம் இலவம் காய் வெடித்து பஞ்சு காற்றில் பறக்கின்றன.
பஞ்சு சாகுபடி (Cotton cultivation)
அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் இலவம் மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியதால் இலவம் காய்கள் காய்ந்து பஞ்சு சாகுபடிக்காக, தயாராக உள்ளன.
வெடிக்கும் காய்கள் (Explosive pods)
-
இலவம் காய்கள் வெடித்து கீழே விழுந்து பஞ்சு பறக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து இலவம் மரம் வைத்துள்ள விவசாயிகள் காய்ந்த இலவம் காய்களை அடிக்கத் தொடங்கி உள்ளனர்.
-
காய்ந்த காய்களை மரத்தில் கூலி ஆள்களை வைத்து இறக்கி வருகின்றனர்.
-
பின்னர் ஓரிடத்தில் மொத்தமாகக் குவித்து பெண் தொழிலாளர்கள் மூலம் காய்ந்த காயிலிருந்து பஞ்சுகளை அகற்றி தனியாக மூட்டை போட்டு விற்பனைக்கு தயார்ப்படுத்தி வருகின்றனர்.
கொள்முதல் தீவிரம் (Purchase intensity)
இலவம் பஞ்சு தேவைப்படும் தலையணை, மெத்தை தயாரிப்பாளர்கள் நேரடியாக மரம் உள்ள விவசாய பகுதிகளுக்கே வந்து பஞ்சை கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர்.
இது பற்றி இலவ மரம் பயிரிட்ட விவசாயி ஒருவர் கூறும் போது கோடைகாலத்தில் இலவம் காய் காய்ந்து, பஞ்சு வரும் பருவமாகும், வெயில் அதிகமாக அடிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் இலவம் காய்கள் மரத்திலேயே வெடித்து பஞ்சு காற்றில் பறந்து வீணாகி வருகிறது.
கிலோ ரூ.100க்கு விற்பனை (Selling for Rs.100 per kg)
அதனால், வியாபாரிகளை கொள்முதலுக்காக எதிர் பார்க்காமல், நாங்களே வேலை ஆட்களை வைத்து காய்களை எடுத்து, பஞ்சை பிரித்து மூட்டை போட்டு வைத்துள்ளோம், கிலோ ரூ.100 லிருந்து விற்பனை செய்கிறோம், என்றார்,
கண்மாய், குளம், வாய்க்கால், மற்றும் தோட்டம், மானாவாரி தோட்டப் பகுதிகளிலும் இலவமரம் பயிரிட்டுள்ளதால், தற்போது பஞ்சு எடுக்கும் சீசன் களைகட்டியுள்ளது.
மேலும் படிக்க...
தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!