சேலம் மாவட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்ற விருப்பம் உள்ள விவசாயிகள், மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.54.28 லட்சம்
தமிழகத்தில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் 2021-22-ஆம் நிதி ஆண்டில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் ரூ.54.28 லட்சம் செலவில் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
தரிசு நிலங்களை
இந்த மானியம் வேளாண், உழவா் நலத்துறையின் வாயிலாக 370 ஹெக்டோ் பரப்பளவில் விளைநிலைங்களை உருவாக்குவோருக்கு வழங்கப்படுகிறது.
குறிப்பாகத் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
எவற்றுக்கு மானியம் (Subsidy for what)
முள்புதா்களை அகற்றுதல், நிலத்தை சமன்செய்தல், உழவுப் பணிகள், விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கலவை விநியோகங்களுக்கு இந்த மானியங்கள் வழங்கப்படுகின்றன.
தரிசு நிலங்களில் சிறுதானியங்கள் 200 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ரூ. 26.80 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
எவ்வளவு மானியம்?
-
சிறுதானியங்கள் பயிா் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 13,400 மானியமாக வழங்கப்பட உள்ளது.
-
பயறு வகைகள் 120 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ரூ. 16.08 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, ஹெக்டேருக்கு ரூ. 13,400 மானியம் அளிக்கப்படுகிறது.
-
இதேபோல், நிலக்கடலை 50 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு ரூ. 11.40 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, ஹெக்டேருக்கு ரூ. 22,800 மானியமாக வழங்கப்பட உள்ளது.
தொடர்புக்கு
எனவே, தரிசு நிலங்களில் மேற்குறிப்பிட்டுள்ளபடி பயிா் சாகுபடி செய்திட விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். இந்தத் தகவல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விதை உற்பத்திக்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!