1. விவசாய தகவல்கள்

தக்காளியின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tomato Value Products Product Training!
Credit : Healthline

உணவுக்குச் சுவையைக் கூட்டிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் உதவுவது தக்காளி.

வேளாண் பல்கலைக்கழகம் (TNAU)

எனவே தக்காளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட உள்ளது. இத்துடன் சேர்த்து, நோனியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், தொழில் முனைவோராக விரும்பும் நபர்கள், தவறாமல் சேர்ந்துப் பயன்பெறலாம்.

கொரோனாவால் நிறுத்தம் (Stop by Corona)

கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாதந்தோறும் காளான் வளர்ப்பு குறித்த நேர்முகப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா ஊரங்கு காரணமாக இந்தப் பயிற்சி தற்காலிகாக நிறுத்தப்பட்டது.

சில மாத கால இடைவெளிக்குப் பிறகு, இணையதளம் வழியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, மீண்டும் நேரடிப் பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2 நாள் பயிற்சி (2 day training)

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் நோனியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 26.10.2021 மற்றும் 27,10.2021 இரண்டு நாட்களில் நடைபெறுகிறது.

பயிற்சி நேரம் (Training Period)

காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்(Special Features)

  • தக்காளி - ஊறுகாய், கெட்சப், ஜாம்

  • நோனி பிளைன் நோனி, நோனி நோனி நெல்லி குவாஷ், ஜாம்,

  • கிரேப்ஸ் குவாஷ்

  • தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள்

இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1.770/- முதல் நாளில் செலுத்திப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தொடர்புக்கு (For Contact)

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் 641 003. தொலைபேசி எண்: 94435 64582, 6611340

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Tomato Value Products Product Training! Published on: 25 October 2021, 07:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.