சீமைக்கருவேலம் உள்ளிட்ட பயன்தராத மரங்களை அகற்றுவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த் அமேலும் அதிக தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு, சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது என்பது நினைவுக் கூறத்தக்கது.
இந்த நிலையில், வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தரப்பில் சீமைக்கருவேலம் உள்ளிட்ட பயன்தராத மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டும் இருந்தது. இதுதொடர்பாக கடந்த ஜூலை13-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது எனக் கூறி, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க 90% மானியம்! விண்ணப்பித்துப் பயனடையுங்க!!
சீமைக்கருவேல மரங்களை இயந்திரம் மூலமாகவும், ரசாயன முறையிலும் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது என்றும், இந்த விஷயத்தில் தமிழகஅரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய நீதிபதிகள், ‘‘சீமைக்கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூற முடியாது எனவும், அதேநேரம், பயன் தராத மரங்களை அகற்றும் பணியில் தனியாரை ஏன் ஈடு படுத்தக்கூடாது’’ எனவும் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!