தொடர் மழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் நெற்பயிரை பூச்சித் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளளர்.
மழையால் சேதம் (Damage by rain)
சென்னை, தஞ்சை, மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களால் பரவலாக மழை பெய்தது. காலை முதல் மாலை வரை பெய்த மழை காரணமாக, நெற்பயிர்கள் சாய்ந்து சேதடைந்தன.
மதுரை (Madurai)
மதுரை மாவட்டத்தில் கள்ளந்திரி மதகு வரையிலான 44 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராகியிருந்த நெற்பயிர்கள், தரையோடு சாய்ந்துவிட்டன. மழை நீர் தேங்கியதால் அறுவடைப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
தஞ்சை (Tanjore)
இதேபோல் தஞ்சையில் பெய்த மழை காரணமாக, அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் வயல்களில் மழைநீர் தேங்கியதால், சம்பா நெற்கதிர்கள் சாய்ந்தன.
விவசாயிகள் கோரிக்கை (Farmers Demand)
முற்றிய நிலையில் மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால், ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையில் சம்பா மற்றும் நேரடி விதைப்பு நெற்பயிர்கள் 60 சதவீதம் வரை மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குளிர்ச்சியான சூல் நிலவுவதால், நெற்பயிரில் பூச்சித் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குலை நோய்த் தாக்கத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
திசுவாழை வளர்ப்புத் திட்டம்- விவசாயிக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசம்
பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!