1. தோட்டக்கலை

பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Amoga yield in Perambalur - Yellow bunches ready for harvest!

Credit: Maalaimalar

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பெரம்பலூரில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், அமோக விளைச்சல் தந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நெருங்கும் பொங்கல் (Approaching Pongal)

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை.

மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது. பண்டிகையின்போது பொங்கலிடும் பானையை சுற்றி மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம்.

மஞ்சள் சாகுபடி (Cultivation of turmeric)

எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் குலைகள் சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

விவசாயிகள் மகிழ்ச்சி(Farmers Happy)

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஆண்டுதோறும் மஞ்சள் குலைகள் சாகுபடி செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இலையுடன் கூடிய மஞ்சள் குலையை அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வோம். வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மஞ்சள் குலையை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்வார்கள்.

தற்போது மஞ்சள் குலை செழுமையாக வளர்ந்துள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் குலைகள் விற்பனைக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

எந்தெந்த பயிர்களுக்கு எப்போது & எவ்வளவு தண்ணீர் தேவை?

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!

English Summary: Amoga yield in Perambalur - Yellow bunches ready for harvest!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.