மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2021 8:13 AM IST
Credit : Chowhound

நீலகிரி மாவட்டத்தில் ஜாதிக்காய், மிளகு மற்றும் கிராம்பு பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் ராணி (Queen of the Mountains)

இயற்கை எழில் கொட்டிக்கிடக்கும், மலை மாவட்டமான நீலகிரியில் குளிர் நிறைந்த பகுதிகளான ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடிக்கு உகந்த பருவநிலை கொண்டவை.

மலைக்காய்கறிகள் (Mountain vegetables)

இங்கு கேரட், பீட்ரூட், டர்னிப், உருளைக்கிழங்கு போன்ற மலைக் காய்கறிகளை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.

நறுமணப் பயிர்கள்  (Aromatic crops)

அதே போல் இங்குள்ள மித வெப்பமான காலநிலை நிலவும் மலைச் சரிவு பகுதிகளில் மிளகு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றை விவசாயிகள் அதிகமாகப் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

பரப்பளவை அதிகரிக்க (To increase the area)

இந்தப் பகுதிகளில் மிளகு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றுக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தப் பயிர்களின் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.20,000 மானியம் (Rs.20,000 grant)

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஜாதிக்காய், மிளகு மற்றும் கிராம்புப் பயிர்களை ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியத்தில் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,

செலவைக் குறைக்க (To reduce the cost)

தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் ஏற்படும் செலவினங்களைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்வேறு மானியங்கள் (Various grants)

இதன் அடிப்படையில் 2021-22ம் ஆண்டில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்திட்டத்தின்கீழ் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட உள்ளன.

125 ஹெக்டேர் இலக்கு (125 hectare target)

இந்தத் திட்டத்தின்கீழ் பல நறுமணப்பயிர்களான மிளகு, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 125 ஹெக்டேருக்கு மானியம் வழங்க நீலகிரி மாவட்டத்துக்கு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை (Department of Horticulture)

எனவே, மிளகு, ஜாதிக்காய் மற்றும் கிராம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு (Contact)

இதுதொடர்பாக ஊட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் 8489604087, குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 6381963018, கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குநர் 9994749166 மற்றும் கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் 8903447744 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தை அளித்தும் உழவன் செயலியில் விவசாயிகள் தங்கள்பெயரை முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் படிக்க...

சம்பங்கி பூ தொடரும் விலை வீழ்ச்சியால் கலக்கத்தில் விவசாயிகள்! கிலோ ரூ.130லிருந்து ரூ.30க்கு குறைந்த அவலம்!!

ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!

English Summary: Rs. 20,000 subsidy for cultivation of nutmeg, cloves and pepper
Published on: 18 July 2021, 06:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now