கோவையில் 1000 சதுர மீட்டரில் பசுமைக்குடில் அமைக்க, ரூ. 4.67 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், சூலுார் உள்ளிட்ட பகுதிகளில் பசுமை குடில் அமைத்தல், சிப்பம் கட்டும் அறை கட்டுதல், பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
இப்பணிகளுக்கான மானியம் வழங்க ஏதுவாக, பணிகள் முடிந்த பசுமை குடில், பண்ணைக்குட்டை உள்ளிட்டவைகளை, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர், வேளாண் பல்கலை பேராசிரியர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்தனர்.
ரூ.4.67லட்சம் மானியம் (Rs.4.67 Subsidy)
அப்போது பேசிய தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி,
தோட்டக்கலைத்துறை மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், 1000 சதுர மீட்டர், பசுமைக்குடில் அமைக்க, ரூ. 4,67 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
அதேபோல், 600 சதுர அடியில் சிப்பம் கட்டும் அறை கட்ட, ரூ. 2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. அனைத்து தொழில்நுட்பங்கள், சாகுபடி முறை குறித்தும் விவசாயிகளுக்கு அலுவலர்கள் பயிற்சி அளிப்பர்,'' என்றார்.
இந்த ஆய்வில் வேளாண் பல்கலை பேராசிரியர் ராமர், சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க...
வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம் –ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!
10 கட்டப் பேச்சும் தோல்வி- அடுத்த பேச்சுவார்த்தை 22ம் தேதி!
நிவாரணம் கோரி 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம்- பி.ஆர். பாண்டியன் தகவல்!