Horticulture

Sunday, 25 July 2021 11:02 AM , by: Elavarse Sivakumar

Credit : Dinamalar

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானியத்துடன் வெங்காய பட்டறை அமைக்க முன்வரவேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வெங்காயத்தின் சிறப்பு (Onion)

வெங்காயம் என்பது சமையலுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில், உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை வெங்காயத்திற்கு உண்டு என்பதால் அதனை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

இதனைக் கருத்தில் கொண்டும், விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், வெங்காய சாகுபடிக்கு பல்வேறு சலுகையை மத்திய - மாநில அரசுகள் வழங்கிவருகின்றன.

வெங்காயப் பட்டறைக்கு (To the onion workshop)

இதன் ஒருபகுதியாக, வெங்காயப் பட்டறை அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரபானு கூறியதாவது:

தோட்டக்கலைத்துறை சார்பில், வெங்காய பட்டறை அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

சேமித்து வைக்க (To store)

வெங்காயப் பட்டறை அமைப்பதன் மூலம், விவசாயிகள் தங்களின் வெங்காயங்களை, விலை கிடைக்காத காலங்களில் பட்டறையில் சேமித்து, உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம்.

விதையாகவும் (And seed)

வெங்காயத்தைப் பட்டறையில் வைத்து, மறு நடவிற்கு விதை வெங்காயமாகவும் பயன்படுத்தலாம்.

ரூ.87,500 மானியம் (Rs 87,500 grant)

வெங்காயப் பட்டறை அமைப்பதற்கு, தோட்டக்கலை துறை மூலம், விவசாயிக்கு, 87 ஆயிரத்து, 500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

5 ஏக்கர் நிலம் (5 acres of land)

இம்மானியத்தைப் பெற, வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயியாக இருக்க வேண்டும். அதோடு, அந்த விவசாயிக்கு குறைந்தது 5 ஏக்கர் விளைநிலம் இருக்க வேண்டும்.

உழவன் செயலி (Plow processor)

விருப்பமுள்ள விவசாயிகள், தொண்டாமுத்தூர் தோட்டக்கலைத்துறை அலுவலகம் மற்றும் உழவன் செயலி மூலமாக, பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!

கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)