1. விவசாய தகவல்கள்

SBI வங்கியில் விவசாய கடன் வட்டி விகிதம் எவ்வளவு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What is the interest rate of sbi bank agricultural loan?
Credit : Teahub

எந்த ஒரு வங்கியாக இருந்தாலும் விவசாயக் கடன் வாங்குவதற்கு முன்பு நீங்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் வட்டி. இந்த வட்டி நீங்கள் வாங்க போகும் ஒவ்வொரு கடனுக்கும் வித்தியாசப்படும்.

SBI வங்கி கடன் (SBI Bank Loan)

அவ்வளவு ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் கூட மாறுபடும். விவசாயக்கடனில் மகளிருக்கு மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு வட்டி விகிதம் இருக்க வாய்ப்பு உண்டு. நாம் இந்த கட்டுரையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வில் கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.

SBI  பயிர்க்கடன் (SBI Crop Loan)

  • விவசாயிகளுக்கு கடன் அட்டை மூலம் கொடுக்கக்கூடிய கடன்களில் ஒன்று. இந்த வகைக் கடனில் 3 லட்சம் வரை உள்ள கடனுக்கு 7% வட்டியாகும்.

  • 3 லட்சத்திற்கு மேல் வாங்கினால், நீங்கள் பணத்தை திரும்பச் செலுத்தும் கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறும்.

  • இந்த பயிர்கடனில் 3 லட்சத்திற்குள் கடன் வாங்குபவர்களுக்கு 2 சதவீத வட்டியை அரசாங்கம் செலுத்தும்.

விவசாய நகை கடன்

விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க கூடிய கடன்களில் ஓன்று வட்டி விகிதம் வருடத்திற்கு 7.5% மாகும் . 3 லச்சத்திற்கு மேல் வட்டி விகிதம் மாறுபடும்

பண்ணை இயந்திரமயமாக்கல் கடன்

ட்ராக்டர் கடன்

SBI வங்கியில் ட்ராக்டர்களுக்கு 4 விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன .

Stree Shakti Tractor Loan(Mortgage free)

இந்த கடனுக்கு ஒரு வருடத்திற்கு 11.50 % வட்டி வசூலிக்கப்படும்

Stree Shakti Tractor Loan-Liquid Collateral

இந்த கடனுக்கு ஆண்டிற்கு 10.95% வட்டி வசூலிக்கப்படுகிறது.

Modified New Tractor Loan Scheme

இந்த கடனுக்கு10.30% ஒரு வருடத்திற்கு

Tatkal Tractor Loan

மார்ஜின் 25% -  10.25%  ஒரு வருடத்திற்கு
மார்ஜின் 40% -  10.10 % ஓர் ஆண்டிற்கு
மார்ஜின் 50% -  10.00 % ஒரு வருடத்திற்கு

அறுவடை கடன்வசதி (Harvest credit)

அறுவடை மற்றும் அறுவடை பின்சார் தொழில் நுட்பத்திற்கான நுட்பத்திற்கான கடன் 3.50 % ஒருவருடத்திற்கு வழங்கப்படுகிறது வழங்கப்படுகிறது.

நீர்ப் பாசனக் கடன்வசதி (Irrigation credit facility)

சொட்டு நீர்ப் பாசன வசதி, அரசாங்கத்தின் சார்பில்  100 % மானியத்தில் செய்து தரப்படுகிறது. அதைத் தவிர்த்து பாசன வசதிக்கடன் மூலமும் பெறலாம். அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்.

பால் பண்ணை கடன் (Dairy farm loan)

ஒரு பால் பண்ணை அமைக்க அல்லது அதற்கான வாகனங்கள் வாங்க, குளிர் சாதன வசதி செய்ய உள்ளிட்டவற்றுக்கு, இந்தவகைக்  கடன் கொடுக்கப்படுகிறது. அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்

கோழி பண்ணை ஆரம்பிக்க கடன் வசதி (Credit facility to start a poultry farm)

கோழி பண்ணை அமைக்க மற்றும் அதற்கான கூடாரங்கள் அமைப்பதற்கும், அல்லது  அது சார்ந்த உபகரணங்கள் வாங்குவதற்கும் இந்தக்கடன் கொடுக்கப்படுகிறது. அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்.

மீன் பண்ணை கடன் வசதி (Credit facility to start a fish farm)

மீன் வலை, உபகரணங்கள் மற்றும் மீன் குஞ்சுகள் வாங்குவதற்கு, இந்தக்கடன் வழங்கப்படுகிறது .அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்.

மேலும் படிக்க...

PM Kisan: ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் ரூ.4000 கிடைக்கும்!! விவரம் உள்ளே!!

English Summary: What is the interest rate of sbi bank agricultural loan? Published on: 26 July 2021, 12:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.