கரூா் வட்டார விவசாயிகள் மானிய விலையில் விதை நெல் மற்றும் உளுந்து பெற்று பயனடையலாம் என வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கரூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் மணிமேகலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கரூா் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கான விதை நெல் மற்றும் உளுந்து ரகங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
நெல் ரகங்கள் (Paddy varieties)
அதன்படி கரூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் கோ - ரகம் 400 கிலோ, நெல்லூா் 34449 ரகம் 900 கிலோ, டிகேஎம் 13 ரகம் 2450 கிலோ மற்றும் விபிஎன்8 உளுந்து ரகம் 270 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கையிருப்பு (Stock)
அதேபோல் வேலாயுதம்பாளையம் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கோ - 51 ரகம் 200 கிலோவும், நெல்லூா் 34449 ரகம் 600 கிலோவும், டிகேஎம் 13 ரகம் 1640 கிலோவும், விபிஎன் 8 உளுந்து 180 கிலோவும், இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நோய் எதிா்ப்பு சக்தி (Immunity)
இதில், கோ நெல் ரகம் 110 நாள்களும், நெல்லூா் மற்றும் டிகேஎம் ரகம் 130 நாள்களும் வயது கொண்டது. சன்ன ரக நெல்மணிகள் குலை நோய் மற்றும் தண்டு துளைப்பான் நோய் எதிா்ப்பு சக்தி கொண்டது. ஹெக்டேருக்கு 6 முதல் 7மெட்ரிக் டன் மகசூல் தரக்கூடியது.
உயிர் உரங்கள் (Bio-fertilizers)
விவசாயிகள் தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டம் மற்றும் விதை கிராமத் திட்டம் மூலம் நெல் சாகுபடிக்குத் தேவையான உயிா் உரங்களான அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 50 சதவீத மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க...