விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்க வேண்டுமெனில், அதனை சுத்திகரிப்பு செய்யவதில் விவசாயிகள் கூடுதல் கவனம் சொலுத்த வேண்டியது அவசியம் என்று வேளாண்மைய அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
விதை சுத்திகரிப்பு (Seed Purification)
-
பொதுவாக விதை உற்பத்தியின் போது வயலை பராமரிக்க நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு, அறுவடைக்கு பின்பு விதைகளை சுத்திகரிப்பு செய்யவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
-
குறிப்பாக விதை பரிசோதனையின் போது பெரும்பாலான பயிறுகளுக்கு குறைந்தபட்சம் 98% புறத்தூய்மை இருக்க வேண்டும்.
-
அறுவடையின் போது தரமான விதைகளோடு சேர்த்து செடிகளின் பாகங்கள்,கல்,மண்,பொக்கு விதைகள், நோய் மற்றும் பூச்சி (Diseased) தாக்கப்பட்ட விதைகள் ஆகியவைக் கலந்து காணப்படும்.
-
இவை விதைகளின் புறத்தூய்மையை அறவேக் கெடுத்து விடும். மேலும் விதை சுத்திகரிப்பின் போது சரியாக முதிர்ச்சியடையாத விதைகள் நோய் மற்றும் பூச்சி தாக்கப்பட்ட விதைகள் நீக்கப்படுவதால் விதைகளின் முளைப்பு திறன் அதிகரிக்கும்.
-
இதற்கு ஏதுவாக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையதில் விதை குழும திட்டத்தின் கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டு, விதை சான்றளிப்பு துறை மூலம் விதை சுத்திகரிப்பு செய்ய மற்றும் சான்று அட்டை பொறுத்த அங்கீகாரம் பெற்றுள்ளது.
-
இங்கு ஒரு குவிண்டால் விதைகளுக்கு ருபாய் 120/- க்கு எல்லாவிதமான பயிர்களுக்கும் விதை சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
-
எனவே விதை சுத்திகரிப்பு செய்ய தேவைப்படுவோர், விவசாய வேளாண் அறிவியல் நிலைய விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதைகளை சுத்திகரிப்பு செய்து பயன்பெறும் படி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
நெல் வரப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ மாற்று யுக்தி!
வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!