ஒருகாலத்தில் இயற்கை விவசாயத்தைச் செய்துவந்த இந்தியாவில் அனைத்துமே ரசாயனமயமாக மாறிவிட்டதால், நம் ரத்தத்தில்கூட ரசாயனம் இல்லாமல் இல்லை.
இயற்கை விவசாயம் (organic farming)
ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், மண்ணிற்கு மறுபிறப்பையும் தரும் இயற்கை விவசாயத்திற்கு மாற நாம் ஒவ்வொருவருமே வித்திடவேண்டிய அவசியம் உருவாகிவிட்டது.
அந்த வகையில் நம் வீட்டுத் தோட்டத்தில் ரசாயனம் கலக்காமல் பாதுக்க சில டிப்ஸ் இதோ உங்களுக்காக!
சமையல் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரைச் சரியான முறையில் சுத்திகரிப்பதன் மூலம், அதில் இருக்கும் வேதிப்பொருட்களை நீக்க முடியும். இவ்வாறு சுத்திகரித்த நீரைச் செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
செடிகள் (Plants)
வீட்டுத் தோட்டத்தில் துளசி, தூதுவளை, நிலவேம்பு, ஆடாதொடா, புதினா, நொச்சி, வெந்தயம், வல்லாரைக்கீரை, வேம்பு, ஓமவள்ளி போன்ற தாவரங்களை வளர்க்கலாம். இவற்றுக்கு காற்றில் உள்ள நச்சுக்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
சுத்திகரித்த நீர் (Purified water)
செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இருந்தால் நிலத்தடி நீர் மாசுபடாமல் தடுக்கலாம்.
மேலும் சமையல் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சரியான முறையில் சுத்திகரிப்பதன் மூலம், அதில் இருக்கும் வேதிப்பொருட்களை நீக்க முடியும். இவ்வாறு சுத்திகரித்த நீரைச் செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
இயற்கை பொருட்கள் (Natural products)
வீடுகளில் பயன்படுத்தப்படும் துணி துவைக்கும் பவுடர், குளியல் சோப்புகள் மற்றும் ஷாம்பு போன்றவற்றுக்குப் பதிலாக இயற்கை சார்ந்தப் பொருட்களை பயன்படுத்துவது நன்மை தரும்.
கிருமி நாசினி (Disinfectant)
உதாரணமாகக் கிருமி நாசினியாக கடுக்காய் ஊறவைத்த தண்ணீர், ஷாம்புக்கு பதிலாக செம்பருத்தி இலை, வெந்தயம், அரப்பு, கற்றாழை போன்றவற்றை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும், நமது உடல் நலனுக்கும் நல்லது.
இயற்கை உரங்கள் (Natural fertilizers)
இயற்கை உரங்களான பசுவின் சாணம், ஆட்டுப் புழுக்கை, பசுந்தாள் உரம், சமையலறையில் பயன்படுத்தும் காய்கறி கழிவுகள் போன்றவற்றை உரமாகப் போடுவதன் மூலம் இயற்கை முறையில் செடிகள் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுக்கும்.
மேலும் படிக்க...