1. தோட்டக்கலை

யூரியாவிற்கு மாற்று எது? பற்றாக்குறையைப் போக்க சில டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What is the alternative to urea? Some tips to overcome the shortage!
Credit: IndiaMART

விவசாயத்தில் யூரியாப் பற்றாக்குறையைப் போக்க, அதற்கு மாற்றாக சில இயற்கை உரங்கள் உள்ளன.அவற்றை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

மேல் உரம் (Top compost)

தற்போது தொடர் மழையால் தமிழகம் முழுவதுமாக விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நடவு செய்யப்பட்ட சம்பா நெல் மற்றும் தானியப் பயிர்கள், மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் என அனைத்துற்கும்,மேல்உரம் இடும் தருணம் இது.

குறிப்பாக தழைசத்து தரக்கூடிய யூரியா உரம். ஆனால் எங்கு பார்த்தாலும் உரதட்டுபாடு நிலவுகிறது. இதனால் உரம் இட வேண்டிய தருணத்தில் உரம் வைக்க முடியாத நிலையில் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்

மாற்று வழிகள் (Alternatives)

அசோஸ்பைரில்லம்

இதற்கு மாற்று வழிகள் உள்ளன. தழைசத்து எனப்படும் நைட்ரஜன் காற்றில்78%உள்ளது. அவற்றை உட் கிரகித்து மண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியத்திற்கு உண்டு. எனவே மண்பரிசோதனை உர பரிந்துரை அடிப்படையில்,25 சதவீதம் தழைசத்து உரத்திற்கு உயிர்உரங்களான அசோஸ்பைரில்லம் ,ரைசோபியம் பயன்படுத்தலாம்.

ஓரு ஏக்கருக்கு 5முதல்10கிலோ வரையில் பயன்படுத்தலாம்
இந்த இயற்கை உரங்கள் வேளாண்துறை அலுவலகத்தில் மானிய விலையில் கிடைக்கின்றன.

தானிய வகைபயிர்களுக்கு அசோஸ்பைரில்லத்தையும், பயிறு வகைபயிர்களுக்கு ரைசோபியத்தையும் பயன்படுத்தி யூரியாப் பற்றாக்குறையைப் சமாளிக்கலாம். மழைக்காலங்களில் தண்ணீர் வடித்து விட்டு மக்கிய குப்பையில் கலந்து இடலாம்.

மீன் அமினோ அமிலம் (Fish amino acid)

10 கிலோமீன்கழிவு, 10கிலோ கழிவு சர்க்கரை, பத்து வாழைப்பழங்கள் கலந்து டிரமில் 15நாள் வைத்து இருந்து பின் பஞ்சாமிர்தம் வாடை வந்ததும், 10லிட்டர் தண்ணீரில் 50மிலி கலந்து தெளிக்கலாம் அல்லது பாசன நிரில் கலந்தும் விடலாம்

  • நெல்பயிருக்கு 2கிலோ யூரியா மற்றும்1, கிலோ ஜிங்க் சல்பேட்டைத் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

  • நானோ திரவ யூரியா தற்போது பரவலாக கிடைக்கின்றன. அவற்றை வாங்கி1லிட்டர் தண்ணீருக்கு 3-5மி.லி கலந்து தெளிக்கலாம்.

எனவே இனிய வருங்காலங்களில் யூரியாவை நம்பியிருக்காமல், மாற்றி யோசித்து செயல்பட்டால் செலவும் குறையும்,வருமானம் கூடும்.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

English Summary: What is the alternative to urea? Some tips to overcome the shortage! Published on: 28 November 2021, 08:45 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.