கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டு 305 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1.83 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நீரின்றி (Without water)
நீரின்றி உலகு மட்டுமல்ல, விவசாயமும் அமையாது. நீரின் தேவை மனிதர்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும், பயிருக்கு மிக மிக அதிகம்தான்.
கட்டாயத் தேவை (Mandatory requirement)
இருப்பினும் நிலத்தடி நீர் வற்றி வரும் நிலையில், பயிர்சாகுபடி பாசனத்திற்கு பயன்படுத்தும் நீரின் அளவைச் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இன்றையக் கட்டாயத் தேவை ஆகும்.
நுண்ணீர் பாசனத்திட்டம் (Micro Irrigation Project)
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டு 305 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1.83 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
100% மானியம் (100% subsidy)
இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்படும். பழங்கள், காய்கறி பயிர்கள், நறுமண பயிர்கள், மலைப்பயிர்கள், குறிப்பாக தென்னை, வாழை, கோகோ ஆகிய பயிர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.
கூடுதல் வருமானம் (Extra income)
குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
குடும்ப அட்டை
-
கிராம அடங்கல்
-
ஆதார் அட்டை
-
நிலத்தின் மண் மற்றும் நீர் பரிசோதனைச் சான்று
-
கணினிசிட்டா
-
நிலவரைபடம்
-
சிறு குறு விவசாகிகளுக்கான சான்று
-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சான்று
வேளாண்துறை அறிவுறுத்தல் (Agricultural instruction)
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மேலேக் குறிப்பிட்டுள்ள அத்தனை ஆவணங்களின் நகல்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.
தகவல்
மா.அரவிந்த்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
மேலும் படிக்க...
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!
121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!