வீடுகள், தோட்டங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் நம் கண்களுக்கு விருந்து அளிப்பது அங்கு பச்சைப்பசேல் எனப் படர்ந்து காணப்படும் புல் தரைகள்தான். ஆனால் இவற்றை வெயில் கொளுத்தும் கோடை காலங்களிலும், பசுமையாகவேப் பராமரிக்க முடியும்.
புல்லின் பசுமை மாறாமல் இருக்க சிறிது கவனம் செலுத்துவதன் மூலம் புல்தரைகளைப் பசுமையாகப் பராமரிக்கலாம். அதற்கான வழிகளைப் பார்க்கலாம்.
வளர்ச்சி குறையும் (Growth will slow down)
கோடையில் புற்களை தரையோடு ஒட்டி வெட்டக்கூடாது. அவற்றின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.
நுனிப்புல்
புல் வெட்டும் இயந்திரத்தின் பிளேடை மூன்றில் ஒரு பாகம் புற்களை வெட்டும் படி சரிசெய்து நுனிப்புல்லை மட்டும் வெட்டி விட வேண்டும்.
ஈரத்தன்மை (Moisture)
-
வெட்டி எடுக்கப்படும் புற்துகள்களை புல் தரையிலேயே விட்டு விட வேண்டும்.இதன் மூலம் புல் தரையின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.
-
மேலும் இவை மூடாக்கு போல மாறி வெப்பத்தைக் குறைக்கும்.
தண்ணீர் சிக்கனம் (Water economy)
-
களைகளை அவ்வப்போது அகற்றி வருவது அவசியம். இதன் மூலம் புல் தரைக்கு தேவையான தண்ணீரை மட்டும் கொடுத்து நீரை சிக்கனப்படுத்தலாம்.
-
மக்கியத் தென்னை நார்க்கழிவுகளை புல்தரைகளின் மீது துாவி விட்டால் அவை நீரை உறிஞ்சி ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
எப்போது நீர் பாய்ச்சுவது? (When to water?)
-
காலை 7:00 மணிக்கு முன் இரவு 7:00 மணிக்கு மேல் நீர்ப் பாய்ச்சுவது நல்லது. நுண்ணீர்ப் பாசன முறையைக் கையாண்டால் நீர்த் தேவையைக் குறைக்கலாம்.
-
திரவ நுண்ணுயிரியான பி.பி.எப்., எம் திரவத்தை ஒருலிட்டர் தண்ணீரில் 10 மில்லி வீதம் கலந்து இலை வழியாகத் தெளித்தால் வறட்சியைத் தாங்கி புற்கள் பசுமையாக வளரும்.
தகவல்
காந்திமதி,
தோட்டக்கலை ஆலோசகர்
மதுரை
மேலும் படிக்க...
நெல்மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க, சேற்றில் புரண்டு விவசாயி நூதன போராட்டம்!
விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!
நள்ளிரவில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை அறிய புதிய யுக்தி!