1. செய்திகள்

நெல்மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாக்க, சேற்றில் புரண்டு விவசாயி நூதன போராட்டம்!

KJ Staff
KJ Staff
Farmers Protest
Credit : Dinakaran

மழையால் நெல் மூட்டைகள் வீணாவதை தடுக்க வலியுறுத்தி, செய்யாறில் சேற்றில் புரண்டு விவசாயி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று உழவர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், மழையால் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும். கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேற்றில் உருண்டு போராட்டம்

நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய குடோன்களை அமைக்க வேண்டும். விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்கும் வகையில் தார்பாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து, சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே மழையால் ஏற்பட்டிருந்த சேற்றில் விவசாயி ஒருவர் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நூதன போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஆர்டிஓவின் (RDO) நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமியிடம் அளித்தனர்.

விவசாயி விளைவிக்கும் பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறதோ, இல்லையோ? ஆனால், பயிர் பாதிப்புக்கு மட்டும் பஞ்சமில்லை. இயற்கை சீற்றங்களான மழை மற்றும் புயல் காற்றால் பயிர்கள் பாதிப்படைகிறது. சில சமயம் மழையில்லாமல் வறண்டு விட, பயிர்கள் வெயிலில் காய்கிறது. இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது. இதனைத் தடுக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!

நள்ளிரவில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை அறிய புதிய யுக்தி!

English Summary: To protect the paddy fields from the rain, the farmer innovative struggle in the mud! Published on: 16 April 2021, 06:29 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.