மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 December, 2020 11:43 AM IST
Credit : OrissaPOST

பயிர்களைத் தாக்கும் அனைத்துவகை பூச்சிகள் மற்றும் பூஞ்சாணநோய்களில் இருந்தும் பாதுகாக்கும் சூப்பர் மருந்து பத்திலைக் கஷாயம்(Natural Medicine). இந்த இயற்கை மருந்தைத் தயாரிப்பது பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர்                      - 200 லிட்டர்
நாட்டுபசுஞ் சாணம்     - 2 கிலோ
நாட்டுபசுங் கோமியம்  - 20 லிட்டர்
மஞ்சள் தூள்                 - 200 கிராம்
இஞ்சி                           - 500 கிராம்
பால் பெருங்காயம்       - 10 கிராம்
250 லி பிளாஸ்டிக் டிரம் - 1
மூங்கில் குச்சி               - 1 (5 அடி நீளம்)
மூடிவைக்கும் துணி      - 1 

தயாரிப்பு (Preparation)

  • இஞ்சியை விழுதாக அரைத்துக்கொண்டு, பால் பெருங்காயத்தை நன்றாக தூள் செய்து கொண்டு, மேற்கண்ட அனைத்து பொருட்களையும் பிளாஸ்டிக் டிரம்மில் சேர்த்தபின், கடிகார சுற்றில் (வலது சுற்று) நன்றாக கரையும்படி கலக்கவும்.

  • டிரம்மின் வாய் பகுதியை சணல் சாக்கினால் மூடி கட்டிவைக்கவும், ஒரு இரவில் (12 மணி நேரத்தில்) பொருட்கள் நொதிக்க ஆரம்பித்துவிடும்.

  • இரண்டாவது நாள் காலை டிரம்மைத் திறந்து கடிகார சுற்றில் நன்றாக கலக்கிய பின்னர் கீழ்கண்ட அளவுகளில் ஒரு கிலோ புகையிலைத்தூள், 1கிலோ பச்சை மிளகாய், 500 கிராம் நாட்டு பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாக நன்றாக அரைத்து சேர்த்து நன்றாக கரையும்படி கலக்கவும்.

  • மூன்றாது நாள் காலை டிரம்மைத் திறந்து கடிகார சுற்றில் மீண்டும் நன்றாக கலக்கியபின் இலைகளைச் சேர்க்க வேண்டும். ஆடு தின்னாத இலைகள், கசப்புச் சுவையுள்ள இலைகள், வாசனை வரக்கூடிய இலைகள், நாற்றம் அடிக்கக்கூடிய இலைகள், பால் வரக்கூடிய இலைகள் உகந்தவை.

  • உதாரணமாக வேம்பு, புங்கன், சீதா, ஆமணக்கு, ஊமத்தை என இந்த ஐந்து இலைகளும் நல்ல பலனை அளிக்கக்கூடியதால் அவற்றை முக்கியமாக சேர்க்க வேண்டும்.

  • வேப்ப இலை (ஈர்க்குடன்), புங்க இலை, சீதாபழ இலை, ஆமணக்கு இலை, ஊமத்தை, இலை, மாமர இலை, வில்வ இலை, துளுக்கமல்லி (முழு செடியும்), கிருஷ்ண துளசி, கொய்யா இலை, பப்பாளி இலை, மாதுளை இலை, மஞ்சள் இலை, இஞ்சி இலை, காப்பி இலை, ஆடாதொடா இலை, எருக்கு இலை, அரளி இலை, நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை மடல்

  • இந்த இலைகள் தலா 2 கிலோ எடுத்துக்கொண்டு சிறியதாக நறுக்கியோ அல்லது இடித்தோ டிரம்மில் சேர்த்து கடிகார சுற்றில் நன்றாக கலக்கவும்.

  • டிரம்மை சணல் சாக்கை கொண்டு மூடி கட்டி வைக்கவும்.

  • தினமும் காலை, மாலை இரு வேளையும் கடிகார சுற்றில் ஒரு நிமிடம் கலக்கி விடவும். 40 நாட்கள் இதை நொதிக்க விடவும். 40 நாட்களுக்கு பின்பு மெல்லிய துணியை வைத்து கரைசலை இரண்டு முறை நன்றாக வடிகட்டிய பின்பு பயன்படுத்தலாம்.

  • டிரம்மின் வாய்ப் பகுதியை துணியால் கட்டி வைக்க வேண்டும்.

  • சூரிய ஒளி, மழை நீர் படாதவாறு நிழலில் வைக்க வேண்டும்.

  • பத்து இலை கஷாயத்திற்கு தேவையான அனைத்து செடிகளையும் நமது நிலத்தின் வேலியை சுற்றி நடவு செய்ய வேண்டும்.

பயன்படுத்துவது எப்படி?(How to use)

10 லிட்டர் தண்ணீரில் 400 மி.லி. கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

பயன்கள் (Benefits)

அனைத்து வகையான பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்தும். பூஞ்சண நோய்களையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தும்

பயன்படுத்தும் காலம் (How long)

இதை 6 மாதங்கள் வரை நிழலில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க...

இந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் ரூ.10 கோடி பரிசு! நம்ப முடிகிறதா?

PM-Kisan : 9 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் -ரு.2000 - பிரதமர் மோடி விடுவித்தார்!

41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!

English Summary: Tenth infusion to protect crops from ripening!
Published on: 27 December 2020, 11:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now