ஊட்டியில் கேரட் உற்பத்தியை 60 சதவீதம் அதிகரிக்க ஏதுவாக அரசு சார்பில் 5 இடங்களில் கேரட் கழுவும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசால், 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், சிறு நிறுவனங்களுக்கான உணவு பதப்படுத்தும் திட்டம், 2021-25ம் ஆண்டு வரை அமல்படுத்தப்படுகிறது. அதில், நீலகிரி மாவட்டத்திற்கு, கேரட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, மொத்த மலை காய்கறி உற்பத்தியில், 40 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கேரட் உற்பத்தியை அடுத்தாண்டு முதல், 60 சதவீதமாக உற்பத்தியை உயர்த்த வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுத்து, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கேரட்டை சுத்தப்படுத்தி சந்தைக்கு அனுப்ப, அரசு சார்பில் அணிக்கொரை, தாவணெ, சுள்ளி கூடு, ஒட்டி மர ஒசஹட்டி, அல்லஞ்சி ஆகிய பகுதிகளில் கேரட் கழுவும் நவீன இயந்திரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன் மூலம் நாள் ஒன்றுக்கு, 10 முதல் 12 டன் அளவுக்கு கேரட்களை கழுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,'' அரசு சார்பில் மாவட்டத்தில், 5 இடத்தில், கேரட் கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் உற்பத்தி செய்த கேரட் முழுவதையும் குறைந்த விலையில், இங்கு வந்து கழுவி பயனடைய வேண்டும்,'' என்றார்.
மேலும் படிக்க...