தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் புதுக்கோட்டை சமிதி குடுமியான்மலையும் இணைந்து நடத்தும் வேளாண் பணியாளர்களுக்கான மாநில அளவிலான அங்கக வேளாண்மை பயிற்சி துவங்கியது.
3 நாள் பயிற்சி (3 Days Training)
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 3 நாள் பயிற்சியை, பயிர் மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் வெ.கீதாலட்சுமி துவக்கிவைத்துப் பேசினார்.
சந்தைப்படுத்துதலின் அவசியம் (The need for marketing)
அப்போது, வேளாண்மையில் பசுமைப்புரட்சி மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள், அங்கக வேளாண்மையின் முக்கிய உத்திகள், விவசாயிகளின் பங்களிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலின் அவசியம் பற்றி விளக்கினார்.
களை மேலாண்மை (Pest Management)
முதல்நாள் பயிற்சியில், உழவியல் துறைத் தலைவர் முனைவர் சி.ஆர்.சின்னமுத்து, மருந்தில்லா களை மேலாண்மை மற்றும் நானோ தொழில்நுட்ப முறையில் களைகளைக் கட்டுப்படுத்தும் விதம் பற்றி எடுத்துரைத்தார்.
உரம் தயாரித்தல் (Compost preparation)
வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்த 3 நாள் பயிற்சியில், அங்கக முறையில் சத்து மேலாண்மை, களை மேலாண்மை, மட்கு உரம், மண்புழு உரம் தயாரித்தல், அங்கக முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக சான்றிதழ் மற்றும் பங்கேற்பாளர்கள் உறுதியளிப்புத் திட்டம் ஆகியவை செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் அங்கக வேளாண்மையில் வெற்றி கண்ட விவசாயிகளின் வயல்வெளிப் பார்வையிடுதலும், கலந்துரையாடலும் இப்பயிற்சியில் இடம்பெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 40 உதவி வேளாண் இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் படிக்க...
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை துவம்சம் செய்யும் மண் கரைசல்!
திசுவாழை வளர்ப்புத் திட்டம்- விவசாயிக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசம்