புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடித் தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்து 40 சதவீதம் நீரினை மிச்சப்படுத்துவதோடு அதிக மகசூல் பெறலாம் என வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பங்கள் (Technologies)
திருந்திய நெல் சாகுபடிக்குத் தரமான, சான்று பெற்ற, உயர்
விளைச்சல்/வீரிய ஒட்டு இரகங்களையே பயன்படுத்த வேண்டும்.ஒரு ஏக்கர் நடவு செய்ய இரண்டு கிலோ விதைகள் போதுமானதாகும். ஒரு ஏக்கர் நடவிற்கு ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) நாற்றங்கால் போதுமானது.
-
மேட்டுப் பாத்திகள் அமைத்து பாலித்தீன் தாள்களைப் பரப்பி மரச்சட்டங்கள் வைத்து அதில் மண்ணையும் தொழுஉரத்தையும் கலந்தக் கலவையை நிரப்பி விதைக்க வேண்டியது அவசியம்.
-
நடவு வயல் துல்லியமாகச் சமன் செய்யப்பட வேண்டும். சமன் செய்வதற்குத் துல்லிய சமன் செய்யும் கருவியைப் (aser Leveler) பயன்படுத்தி வயலைத் தயார் செய்வது இன்றியமையாதது.
-
10 முதல் 14 நாட்கள் வயதுடைய இளநாற்றுகளை மட்டுமே நடவு செய்ய வேண்டும்.
-
அடையாளமிடுவதற்கு வசதியாக மார்க்கர் கருவியைப் பயன்படுத்தி 22.5X22.5 செ.மீ. இடைவெளியில் சதுரமுறையில் நடவு செய்ய வேண்டும்.
-
குத்து ஒன்றுக்கு ஒரு நாற்று மட்டுமே வைத்து நடவு செய்ய வேண்டும்.
-
காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் அதாவது நீர் மறைய நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். 2.5 செ.மீ. உயரத்திற்கும் மேல் நீர் நிறுத்துதல் கூடாது.
களையெடுத்தல் (Weeding)
கோனோவீடர் எனும் உருளும் களைக்கருவியைக் கொண்டு நடவு செய்த 10ம் நாள் முதல் 10 நாட்களுக்கொரு முறை என நான்கு தடவை குறுக்கும் நெடுக்குமாகப் பயன்படுத்திக் களையெடுக்க வேண்டும். இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தித் தேவையான தழைச்சத்தினை மேலுரமாக இடுதல் வேண்டும்.
நன்மைகள் (Benefits)
-
இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தித் தேவையான
-
தழைச்சத்தினை மேலுரமாக இடுதல் வேண்டும்.
-
திருந்திய நெல் சாகுபடிக்குக் குறைந்த விதையளவு போதுமானது.
-
நாற்றங்கால் பராமரிப்புச் செலவு குறைகிறது.
-
இளம் நாற்றை நடுவதனால் விரைவான பயிர் வளர்ச்சி, அதிக வேர் வளர்ச்சி மற்றும் அதிக தூர்கள் கிடைப்பதனால் பயிர்களின் சாயாத தன்மை அதிகரிக்கிறது.
-
மண்ணின் மேற்பரப்பில் உருளும் களைக்கருவி கொண்டு களையெடுப்பதனால் மண்ணின் காற்றோட்ட வசதி அதிகமாகும்.
-
இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் மேம்படுகிறது.
-
30 முதல் 40 சதவீத நீர் சேமிக்கப்படுகிறது.
-
பூச்சி நோய்த் தாக்குதல் மற்றும் எலித்தாக்குதல் குறைகிறது.
-
முதிரும் பருவம் வரை பயிர் பசுமையாக இருப்பதால், பதர் இல்லாத நன்கு முற்றிய நெற் மணிகள் கிடைக்கின்றன.
-
இதனால் கூடுதலான தானிய மகசூலும் அதிக வைக்கோல் மகசூலும் கிடைக்கின்றன.
-
விவசாயிகளுக்குக் கூடுதல் இலாபம் கிடைக்கிறது.
தகவல்
இராம.சிவகுமார்
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்
மேலும் படிக்க...
கோடிகளைக் குவிக்க உதவும் குப்பைகள் (வாழை நார்) - VAP தயாரிப்பு!