Horticulture

Friday, 17 June 2022 10:03 PM , by: Elavarse Sivakumar

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விதைத்த விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலி விதைகள் பற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தனி நபரிடம் விதை நெல் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

7 நாட்கள்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விவசாயிகள் விதை நெல்லை வாங்கி நாற்றாங்கால் பயிரிடுவதற்காக விதைத்து வருகின்றனர். நாற்றாங்கால் 7 நாளுக்குள் முளைத்து, அதிலிருந்து 25 நாட்களுக்கு பிறகு நாற்றை எடுத்து வயல்வெளியில் நடுவார்கள்.இதற்காக விதை நெல் வேளாண்மை துறை மூலமும், தனியார்களும் விற்பனை செய்து வருகின்றனர்.

விதைகள்

வேளாண்மை துறை மூலம் கோ.51 ரக விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுருளி–ப்பட்டி–யில் தனியார் மூலம், 509 ரக விதைநெல் விவசாயிகள் சிலர் பெற்று உத்தமுத்து , சுருளிப்பட்டி ஆகிய பாசனபரவுகளில் நாற்றாங்காலுக்காக விதைத்துள்ளனர்.

அதிர்ச்சி அளித்த நெல்

7 நாட்களாகியும் நாற்றாங்கால் முளைக்கவில்லை. அருகே உள்ள மற்ற நிலங்களில் நாற்றாங்கால் வளர்ந்து வருகிறது. இதனால் தனியாரிடம் விதை நெல் வாங்கியவர்கள் நாற்றாங்கால் முளைக்காத–தால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். விதை நெல் விற்றவர் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விழிப்புணர்வு இல்லை

போலி விதை நெல் பற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது, சான்றளிக்கப்பட்ட விதைகளை வேளாண்மை துறை மூலம் வழங்குவதாக அதிகாரிகள் விவசாயிகளுக்கு முறையான தகவல்களை தெரிவிப்பது இல்லை. இதனால் விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தனி நபரிடம் விதை நெல் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். வேளாண்மை துறை விவசாயிகளிடையே தகவல் தொடர்பு இல்லாததே இதற்கு காரணம்.

நடவடிக்கை

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயி கூறினார்.

மேலும் படிக்க...

கவரும் ஸ்ட்ராபெரி - விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)