தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து விவசாய மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளையும், மானியங்களையும் தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்பதிவில் காளான் உற்பத்திக்கான மானியம் அறிவிப்பு குறித்து பார்க்க உள்ளோம்.
சமீபத்தில், சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.
தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் காளான் உற்பத்தியினை ஊக்குவிக்க காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க 40 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் மானியமாக வழங்கப்படும். மேலும், கிராமப்புற மகளிர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க சிறிய அளவிலான காளான் உற்பத்தி கூடம் அமைத்திட ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கப்படும். அதே நேரம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இத்திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை துறையின் அதிகார்பபூர்வ இணையதளமான www.tnhorticulture.tn.gov.in/tnhortinet/registration new.php மூலம் பதிவு செய்ய துறையால் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: TNAU: சிறுதானியங்கள் வைத்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!
சந்தை வாய்ப்பு!
காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது என்பது குறிப்பிடதக்கது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. பொதுவாக, சூப் தயாரிக்க, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க, வெஜிடபிள் பிரியாணி செய்ய, ஊறுகாய் செய்ய என பல வகைகளில் உணவுப் பிரியர்களால் விரும்பப்படுகிறது. காளான் பவுடர் பால் கொதித்த நீரில் கலந்து டானிக்காக குடிக்கவும் பயன்படுகின்றது என்பது பலர் அறியாத உண்மையாகும். பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. எனவே, இது விவசாயிகள் மற்றும் தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான நல்ல தேர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழிலுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசின் இந்த மானியத்தை உபயோகித்து உடனே, தொடங்குங்கள் உங்களுக்கென ஒரு தொழில்.
மேலும் படிக்க:
BECIL ஆட்சேர்ப்பு 2022 – 94 காலிப் பணியிடங்கள், ரூ.44,000 சம்பளம்