1. செய்திகள்

சதமடிக்க உள்ள சின்னவெங்காயம்! விலை என்ன?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Small onion price soon be century! What is the price?

சின்ன வெங்காயத்தின்‌ விலை, விரைவில்‌ நுறு ரூபாயை எட்டும்‌ என வியாபாரிகள்‌ தெரிவிக்‌கின்றனர்‌. கடந்த ஓராண்டுக்கும்‌ மேலாக சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை.

சின்ன வெங்காயம்‌ சாகுபடி செய்து கையை. சூட்டுக்‌ கொண்ட விவசாயிகள்‌ வைகாசி பட்டா சீசனில் சின்ன வெங்காயம் நடவு செய்வதை பெருமளவு குறைத்து விட்டனர்.

இந்நிலையில்‌, தொடர்‌மழை காரணமாக கணிசமான பரப்பளவில்‌ வெங்‌காய பயிர்கள்‌ அழுகி வீணானதும் குறிப்பிடதக்கது. விவசாயிகள்‌ பயிர்‌ சுழற்சி முறைக்கு, முக்கியத்துவம்‌ தராமல்‌ ஒரே‌ வயலில்‌ தொடர்ந்து வெங்காயம்‌ சாகுபடி செய்ததால்‌ தரமான வெங்காயம்‌ கிடைக்கவில்லை‌, வைகாசி பட்டத்தில்‌ நடவு செய்த சின்ன வெங்‌காயத்திற்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால்‌ சின்ன வெங்காயத்தின்‌ விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து வியாபாரிகள்‌ சிலர்‌ கூறியதாவது: கடந்த மாதம்‌ முதல்‌ தர வெங்காயம்‌ கிலோ, 40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் உள்ளூர் சந்தையில், 15 முதல் 20 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது முதல் தர வெங்காயம் கிலோ, 55 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 25ரூபாய்க்கும் கொள்முதல்‌ செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: NMMS உதவித்தொகை: மாணவர்களுக்கு ₹12,000 உதவித்தொகை, விண்ணப்பிக்க அறிவிப்பு!

விலை அதிகரித்து வருவதால்‌ கடந்த கார்த்திகை பட்டத்தில்‌ விலை கிடைக்‌காமல்‌ பட்டறை அமைத்து இருப்பு வைத்திருந்த சின்ன வெங்காயம்‌ வேகமாக காலியாகி வருகிறது. விரைவில்‌ இருப்பு தீர்ந்து விடும். அறுவடையும் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வரும் டிசம்பர் மாதத்தில்‌ ஒரு கிலோ சின்ன வெங்காயம், 100 ரூபாயை எட்டும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க:

ஜவுளித்துறைக்கான ஊக்கத் திட்டம்: PLI 2.0 என்ன பயன்?

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை மானியக் கடன்| SSC Free Camp

English Summary: Small onion price soon be century! What is the price? Published on: 07 October 2022, 11:48 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.