வீட்டு தோட்டம் அமைப்பது தொடர்பான ஆன்லைன் பயிற்சி, சென்னை தோட்டக்கலை துறை சார்பில் நாளை மறுதினம் நடைபெறுகிறது.
ரசாயனமில்லா காய்கறிகள் (Chemical-free vegetables)
சென்னை உள்ளிட்ட நகரங்களில், வீட்டு மாடி மற்றும் காலியாக உள்ள இடங்களில் தோட்டம் அமைக்கப்படுவது அண்மையாகலமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ரசாயன கலப்பில்லாத காய்கறிகள், பழங்கள் கிடைக்கின்றன. வீட்டில் இருக்கும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கு உடற்பயிற்சியாகவும் தோட்டம் பராமரிப்பு பணிகள் அமைகின்றன.
இதற்காக, வீட்டு தோட்டம் திட்டத்தின் கீழ், பாலிதீன் பைகள், காய்கறி, கீரை விதைகள், தென்னை நார்கழிவு, நடவுச்செடிகள், இயற்கை உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை, தோட்டக்கலை துறை மானிய விலையில் விற்பனை செய்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தோட்டம் அமைக்க பண்ணைகளில் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்தாண்டு கொரோனா நெருக்கடி காரணமாக நேரடி பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாளை மறுதினம் 18ம் தேதி மாலை, 5:00 முதல், 6:30 மணி வரை ஆன்லைன் வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துறையின் கீழ் இயங்கும் தோட்டக்கலை வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள், சாகுபடி தொழில்நுட்பங்களை வழங்க உள்ளனர்.
இலவசமாக பயிற்சி பெற விரும்புவோர், http://tnhorticulture.tn.gov.in/horti/tnhorticulture/webinar என்ற ஆன்லைன் இணைப்பில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய வேண்டும் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க...
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!
தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!