கொரோனா ஊரடங்குக் காரணமாகக் கடலூரில் பலாப்பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், அறுவடை செய்யாமல் மரத்திலேயே பலாப்பழங்கள் வெடித்து வீணாகின்றன.
பலாச் சாகுபடி (Jackfruit cultivation)
கடலூர் மாவட்டத்தில் செம்மண் பூமியான பண்ருட்டி, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, சிலம்பி நாதன்பேட்டை, விலங்கல்பட்டு, பெத்தாங்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது.
பலா சீசன்(Jackfruit Season)
இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் துவங்கி, மே மாதம் வரை பலாப்பழ சீசன் ஆகும்.
வெளிமாநில விற்பனை (Other state Sales)
இந்தக் காலங்களில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் பலாப்பழங்கள் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
மரங்கள் குத்தகைக்கு (Leasing of trees)
இதற்காக அங்கிருந்து மொத்த வியாபாரிகள் ஆண்டுதோறும் கடலூருக்கு வந்து பலாப்பழங்களைக் கொள்முதல் செய்வர். இதனைக் கருத்தில்கொண்டு, உள்ளூர் வியாபாரிகள், பலா மரங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வர்.
வெடித்து வீணாகும் நிலை (Explosive waste level)
இதன்படி கடந்த பிப்ரவரி மாதம், பலாப்பழம் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் , பலாப்பழங்கள் மரத்திலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாங்க ஆள் இல்லை (No Purchase)
இது குறித்து சேடப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஊரடங்குக் காரணமாகப் பலாப்பழங்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை.
அறுவடை (Harvesting)
அதையும் மீறி சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம்.
குறைந்த விலை (Low Price)
அந்தப் பழங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், சுற்றுப்பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். ஆனாலும், முழுமையாக விற்பனையாவதில்லை.
பெரிய அளவில் நஷ்டம் (Large-scale loss)
ஆயிரக்கணக்கில் பலாப்பழங்கள் மரத்திலேயே வெடித்து, அழுகி வருகின்றன. இதனால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கைத் தேவை (Action required)
எனவே பலாப்பழங்களை அறுவடை செய்யவும், இங்கிருந்துத் தடையின்றி வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...
கடலூரில் விதை பரிசோதனை திட்ட பணிகள் ஆய்வு! அதிக மகசூலுக்கு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்!
சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!