1. விவசாய தகவல்கள்

சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!

KJ Staff
KJ Staff
Jasmine Cultivation
Credit : Mathrubhumi English

மல்லிகைப் பூ பூத்தும், காய்த்தும் விலையின்றி விவசாயிகளை வேதனைப்படுத்தும் நிலை தற்போது மாறி வருகிறது. பூக்காத காலகட்டத்தில் மல்லிகையை (Jasmine) பூக்க வைத்து விவசாயிகளுக்கு விலை கிடைக்க வைத்து வெற்றி பெற்றுள்ளது மதுரை வேளாண் அறிவியல் நிலையம்.

வேளாண் துறையின் ஆலோசனை:

மாசி - புரட்டாசி வரை அதிகமாக மல்லிகை பூக்கும். செடிக்கு 8 - 10 கிலோ கிடைக்கும். விலை கிலோவுக்கு ரூ.200 தான். ஐப்பசி - தை வரை 'ஆப் சீசன்' பூக்கள் கிடைக்காது. பூ இல்லாத காலத்தில் பூக்க வைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை (Farmers income) அதிகரிக்க திட்டமிட்டோம். செப்., 4வது வாரம் கவாத்து செய்ய வைத்தோம். தண்ணீர் விட்டு ஒரு செடிக்கு 60 கிராம் யூரியா, 120 கிராம் பாஸ்பரஸ், 120 கிராம் பொட்டாஷ் கொடுக்க வேண்டும். இலைகள் துளிர்த்து ஒரு மாதத்தில் இலை நன்கு வளர்ந்து விடும். வளர்ச்சி ஊக்கியான சைட்டோசைம் 1000 பி.பி.எம். இலைவழி தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 4 மில்லி ஹியூமிக் அமிலம் தெளித்தால் அரும்பு விட ஆரம்பிக்கும்.

அக்டோபர் இறுதி, நவம்பர் தொடக்கத்தில் பூக்கும். அளவு குறைவாக இருந்தால் கூட கிலோ ரூ.2000 - 3000 வரை விலை கிடைக்கும். திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி, செல்லம்பட்டியில் மல்லிகை நிறைய விளைகிறது. இப்பகுதியில் இருந்து தலா 5 விவசாயிகளை தேர்வு செய்து கவாத்து பயிற்சி, வளர்ச்சி ஊக்கி தெளிக்க பயிற்சி ஆரம்பித்தோம். நவம்பரில் இடுபொருட்கள், கவாத்து கருவி இலவசமாக கொடுத்தோம். 25 விவசாயிகளில் 75 சதவீதம் பேர் நிறைய லாபம் பெற்றனர். விரும்பும் விவசாயிகளுக்கான தொழில் நுட்ப உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என்றார் நிலைய ஒருங்கிணைப்பாளர் செல்வி கூறினார்.

'ஆப் சீசனில்' நல்ல இலாபம்

2 ஏக்கரில் மல்லிகை சாகுபடி (Jasmine Cultivation) செய்கிறேன். பயிற்சிக்கு முன் 'ஆப் சீசனில்' வேலை செய்தது இல்லை. கவாத்து செய்து, மருந்து தெளித்தோம். நவம்பர், டிசம்பரில் நல்ல லாபம் கிடைத்தது. தினமும் 5 கிலோ வரை பூக்கும். கிலோவுக்கு ரூ.2500 கிடைத்ததே பெரிய லாபம் தான். இந்த சீசனுக்கும் தயாராக இருக்கிறேன் என்று மல்லிகை விவசாயி ஆண்டி கூறினார்.

பறிப்பு கூலி குறைந்தது:

மழை காலத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை கவாத்து பண்ணினால் சூரியவெளிச்சம் (Sunlight) பட்டு புழு, பூச்சிகள் இறந்து விடும். மருந்து அதிகமாக தெளிக்க வேண்டியதில்லை. 3 ஏக்கரில் 70 சென்ட் இடத்தில் மட்டும் 'டிரையல்' பார்த்தேன். சீசனில் 100 கிலோ பூத்தாலும் கிலோ ரூ.100 வீதம் ரூ.10ஆயிரம் தான் வரும். பறிப்பு கூலி செலவு அதிகமாகி விடும். ஆப் சீசனில், 70 சென்டில் தினமும் 5 கிலோ பூ கிடைத்தது. அதுவே ரூ.10 ஆயிரத்துக்கு மேல் லாபம் கிடைத்தது. பறிப்பு கூலியும் குறைவு. லாபம் நல்லாயிருக்கு. ரெகுலர் சீசன்ல ஆடு, மாடுகளை மேய விட்டா நல்லா பூக்கும். ஆப் சீசன்ல பூக்காது. இலையா பெருகிரும். அதுக்கு கவாத்து தான் ஒரே வழி. அடுத்து வர்ற சீசன்ல 3 ஏக்கர்லயும் கவாத்து பண்ணி லாபம் பார்ப்பேன் என்று மல்லிகை விவசாயி கண்ணன் கூறினர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!

கடலூரில் விதை பரிசோதனை திட்ட பணிகள் ஆய்வு! அதிக மகசூலுக்கு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்!

English Summary: Department of Agriculture offers jasmine flowering advice during off-season! Higher profit at lower cost! Published on: 23 April 2021, 05:47 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.