எல்லாப் பருவத்திலும், எந்த மண்ணிலும் நன்று செழித்து வளர்ந்து அதிக மகசூல் தரும் பயிர் எது தெரியுமா? அவைதான் பயிறுகள்.
பயிறு சாகுபடி
தமிழகத்தில் பயறு சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, பயிர் உற்பத்தி அதிகரிக்கத் தமிழக அரசு தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பயிறு சாகுபடி எல்லா வகையான மண்ணிலும், எல்லா பருவத்திலும், 60-75நாட்களில் மகசூல் தரவல்லது.
தழைச்சத்து (Nutrient)
பயிர் சாகுபடி செய்வதால் மண்ணில்15கி-26கிலோ வரை தழைச்சத்து காற்று முலம் கிரகித்துக்கொண்டு, மண்ணில் வளம் சேர்க்கும்.
அத்துடன் குறுகிய காலத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
உயர் விளைச்சல் ரகங்கள் (High yielding varieties)
தரமான உயர் விளைச்சல் ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
-
துவரை CORG-7.CO6.VBN2
-
உளுந்துVBN 4.5.8.Co6
-
பாசிப்பயறுco6 co7
பயிரிடுவது எப்படி? (How to cultivate?)
பயிர் எண்ணிக்கை ஓரு சதுர மீட்டருக்கு 33செடிகள் இருக்க வேண்டும்.
இரவில் விளக்கு பொறி வைத்து பூச்சி களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.
ஊட்டச்சத்து (Nutrition)
பயறு விதை க்கு முன் பயிறு நுண்ணுட்டச் சத்து ஏக்கருக்கு 2கிலோ மண்ணில் இட வேண்டும்.பூக்கும் தருணத்தில் பயறு ஒண்டர் 2.25கிலோ தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது 2சதவிகித டி.ஏ.பி கரைசல் தெளிக்க வேண்டும்.
சாரசரியாக ஒரு செடியில் இருந்து45-65 வரைக் காய்கள் கிடைக்கும். அந்த ஒரு காய்-யில் 10-15 விதைகள் இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும்.தற்போது பயிறு வகைகள் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த நிலத்தையும் தரிசாகப் போடாமல் பயறு வகைகள் விதைத்துக் கூடுதல் வருமானம் பெறலாம்.
குறைந்த மழை (Low rainfall)
குறைந்த அளவு மழை அளவு 200 மி.மீ இருந்தால் கூட, எளிதாக வளரும்.
100 கிராம் பயறு, 340கலோரி சக்தியை அளிக்கும். இவற்றில் புரத சத்து 35-40 சதவீதம் உள்ளது. எனவே நேரத்தை வீணாக்கமால், பயிறு வகைகளைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக மகசூலும் ஈட்ட முடியும்.
தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
அருப்புக்கோட்டை
9443570289.
மேலும் படிக்க...
PM Kisan தவணை: மொபைல்-ஆப்பில் விவசாயிகள் பதிவு செய்வது எப்படி?
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 15ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை!