எங்கள் கல்லூரியில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் நல்ல வேலைக்குப் போக, நாங்க காரணமாக இருக்கிறோம். பல மாணவர்களை, பெரிய நிறுவனங்களுக்குத் தலைமை பொறுப்புகளுக்குப் போகும் அளவுக்கு உருவாக்கியிருக்கிறோம். உலகம் முழுக்க சிறந்த சமையல் கலைஞர்களை உருவாக்கி, அனுப்பியிருக்கிறோம். ஆனால், விவசாயத்தை நேசிப்பவர்களாக, விவசாயத்தைப் பற்றி நுணுக்கமாகத் தெரிந்தவர்களாக ஒருவரையும் மாற்றவில்லை என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அதற்காகத்தான், இந்த சிறிய முயற்சி.
காய்கறி தோட்டம்:
கரூர் மாவட்டம், கொடையூரில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி என்ற பெயரில் தனியார் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார் செங்குட்டுவன் (Senguttuvan). தனது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் (Organic Farming) குறித்த புரிதல்களை ஏற்படுத்துவதற்காக, கல்லூரி வளாகத்தில் காய்கறித் தோட்டம் (Vegetable Garden) அமைத்திருக்கிறார். 50 சென்ட் இடத்தில் அமைந்திருக்கும் இந்தக் காய்கறித் தோட்டத்தை, முழுக்க முழுக்க இயற்கை முறையில் பராமரித்து வருகிறார். அருகில் உள்ள மாணவர்கள் தினமும் வந்து இந்த காய்கறித் தோட்டத்தில் தங்களின் அன்றாடப் பொழுதுகளை செலவிட்டு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வருகிறார்கள்.
இரசாயன கலக்காத இயற்கை காய்கறிகள்:
விவசாயப் பகுதியான இந்தப் பகுதியில் உள்ள என் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வை (Awareness) ஏற்படுத்தவில்லை என்ற குறை மனதை வாட்டியது. ஏர் பின்னது உலகம் என்ற திருக்குறள் உழவுத்தொழிலின் மேன்மையைச் சொல்லி விளக்குகிறது. ஆனால் இன்றைய சந்ததி, ஐ.டி துறையில் வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதை மாற்ற, என்னாலான முயற்சியை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என் கல்லூரி வளாகத்தில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைத்து, அதன்மூலம் மாணவர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் (Interest) ஏற்படுத்த வேண்டும் என்று யோசனை தோன்றியது. சரோஜாவும், அவரின் தங்கை மகன் கார்த்திக்கும் சேர்ந்து, எனது கல்லூரி வளாகத்தில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து தர முன்வந்தார்கள். கடந்த ஜனவரி மாதம் அதற்கான வேலையை ஆரம்பித்தோம். முதல்கட்டமாக, 50 சென்ட் இடத்துல தோட்டம் அமைக்க நினைத்தோம். ஒரு சதவிகிதம் கூட இதில் ரசாயனம் கலக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். நிலத்தை தகுந்த முறையில் சீரமைத்து இலை தழைகளைக் கொண்டு மூடாக்குப் போட்டு, அதில் காய்கறித் தோட்டத்தை அமைத்தார்கள்.
காய்கறி வகைகள்:
அவரை, பாகை, சுரை, புடலை, பூசணி, பீர்க்கங்காய், தர்பூசணி, சிறுகீரை, புளிச்சக்கீரை, பெருகீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி கீரை, வெண்டை, கொத்தவரைனு பலவகை காய்கறி, கீரை வகைகளை பயிர் செய்தோம். கல்லூரி வளாகத்தில் உள்ள போர்வெல்லில் (Borewell) இருந்து தண்ணீர் எடுத்து, சொட்டுநீர் பாசனம் (drip irrigation) முறையில் காய்கறி செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினார்கள். இயற்கை உரங்களை (Organic Fertilizer) இடுவதற்கு ஏதுவாக, 4 நாட்டு மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார்கள். கோமியம் கலந்த இயற்கை பூச்சிவிரட்டிகளை மட்டுமே பயன்படுத்தார்.
மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்கி, அவர்களுக்கு வழித்துணையாக இருந்து செயல்படும் செங்குட்டுவன், அடுத்த தலைமுறை விவசாயிகளை உருவாக்கி வருகிறார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
சூரியகாந்திப் பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் வழிகள்!