1. விவசாய தகவல்கள்

சூரியகாந்திப் பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

KJ Staff
KJ Staff
Pest Control in Sunflower

Credit : Pinterest

சூரியகாந்தி பயிரில் தலைத்துளைப்பான், புகையிலைப் புழு கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றி மகசூல் (Yield) இழப்பைத் தடுத்து அதிக லாபம் பெற முடியும்.

தலைத் துளைப்பான் புழு: தலைத் துளைப்பான் பயிரின் தலைப் பகுதியில் மட்டும் துளையிடும்.

அறிகுறிகள்:

 • பயிரில் தலைப் பகுதியின் உள்ளே துளைகள் காணப்படும். நன்றாக வளர்ந்த விதைகளின் மீது புழுக்கள் உள்ளதற்கான அறிகுறி காணப்படும்.
 • பூஞ்சான் உருவாகி, தலைப்பகுதி அழுகத் தொடங்கும். வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் புழுக்கள் (Worms) இலைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்து பின்னர் தலைப் பகுதியைத் துளைக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

 • சூரியகாந்தியில் (Sunflower) ஊடு பயிராக பச்சைப் பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் (Soybean) பயிரிடுவதன் மூலம் தலைத்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். 3-க்கு 4 வரிசை என்ற அளவில் மக்காச்சோளத்தை பயிரைச் சுற்றி விதைக்கலாம்.
 • பொறிப் பயிர்களாக ஏக்கருக்கு துலக்கமல்லி 50 செடிகள் என்ற அளவில் விதைக்கலாம்.
 • ஏக்கருக்கு 4 இனக் கவர்ச்சிப் பொறிகள் வைத்தும் கட்டுப்படுத்தலாம். விளக்குப்பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
 • இரை விழுங்கிகளான காக்சி நெல்லி டிஸ், கிரைசோபெர்லா கார்னியா (Chrysoperla cornea) 1 புழு என்ற அளவில் வயலில் வெளியிடலாம்.
 • ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா பிரக்கான் (Trichogramma Bracken) வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம்.
 • தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை மாலை நேரங்களில் தெளிக்கலாம். 5 சதவீத வேப்பெண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டைச் சாற்றை முட்டை இடும் முன் தெளிக்க வேண்டும்.

புகையிலைப் புழுவின் அறிகுறிகள்:

 • பூச்சிகள் இளம் இலைகள், கிளைகள், இதழ்களை உண்ணும்.
 • பின்னர் வயல் முழுவதும் பரவி, இலைகள் உதிரும்.
 • வளர்ந்த விதைகளை புழுக்கள் உண்ணும்.

கட்டுப்படுத்தும் முறை:

 • புகையிலைப் புழு தாக்கிய முட்டைகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
 • பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை 4 மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தேனீக்கள் (Honey Bee) வரவு குறைவாக இருக்கும்.
 • பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்க மருந்து (Growth stimulant) தெளித்த நாளில் பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும்.

இத்தகைய தொழில்நுட்பமுறைகளைப் பின்பற்றி மகசூல் (Yield) இழப்பைத் தடுக்கலாம்.

தகவல் : உழவரின் வளரும் வேளாண்மை

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

பயறு வகைகளில் விதை நேர்த்தி! மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

புஞ்சை நிலத்தை செழிப்பாக்க பண்ணைக் குட்டைகளை அமைப்போம்!

English Summary: Ways to control pests and increase yields in sunflower crop!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.