News

Saturday, 15 October 2022 06:37 PM , by: Elavarse Sivakumar

தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 மற்றும் 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கருணைத்தொகையும் சேர்த்து வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நரகாசூரனை கிருஷ்ணர் அழித்த தினமே, தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்நாளில், காலையில் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்பு மற்றும் பலகாரங்களுடன் காலை உணவை உட்கொண்டு, நண்பர்களுடன் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். இதற்கு ஆகும் செலவுக்காக, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைசெய்வோர்,  மாதந்தோறும் தீபாவளி செலவுக்காகச் சேமிப்பது வழக்கம். 

24ம் தேதி

ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக, அரசின் சில துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன்னதாக தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அரசு அறிவிப்பு

இந்நிலையில், தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷம்

அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதைக் காட்டிலும், தீபத்திருநாளாம் தீபாவளி நன்நாளை, கூடுதல் சந்தோஷத்துடன் கொண்டாட வழிவகை செய்திருக்கிறது.

மேலும் படிக்க...

மாத சம்பளதாரர்களுக்கு விரைவில் ரூ.81,000 - மத்திய அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)