இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 10 கிலோ கலப்பு எரிவாயு சிலிண்டருக்கு தமிழகத்தில் சுமார் 42,000 பேர் பதிவு செய்துள்ளதாக Indane அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த 10 கிலோ கம்போசிட் சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான LPG சிலிண்டர்களை விட அதிகளவு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சிலிண்டர் வடிவமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை மானியம் இல்லாத பிரிவில் மட்டுமே 10 கிலோ கலப்பு எரிவாயு சிலிண்டர் கிடைத்த நிலையில் தற்போது மானிய வகையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 10 கிலோ சிலிண்டரின் வாங்குவது பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
" தமிழகத்தில் மொத்தம் 1.45 கோடி இண்டேன் LPG நுகர்வோர் உள்ளனர். ஜூன் 1 ஆம் தேதி வரை, மொத்தம் 42,000 வாடிக்கையாளர்கள் 10 கிலோ சிலிண்டர்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். அவர்களில் 24,767 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்" என்று ஒரு அதிகாரி கூறினார்.
அப்படி என்ன ஸ்பெஷல் 10 கிலோ சிலிண்டரில்?
வழக்கமான சிலிண்டரின் வடிவமைப்புடன் ஒப்பிடுகையில், இந்த சிலிண்டரில் உயர் அடர்த்தி பாலிஎத்திலின் (HDPE- high density polyethylene) மூலம் செய்யப்பட்ட உள் லைனரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் மேற்பரப்பு பாலிமர்-பைபர் கிளாஸ் அமைப்பு மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டரின் வெளிப்புறமானது DDPE (double density polyethylene) செய்யப்பட்ட அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரு வழக்கமான எஃகு சிலிண்டரின் மொத்த எடை 30 கிலோ (14.6 கிலோ எல்பிஜி உட்பட) இருக்கும். அதே நேரத்தில் 10-கிலோ கலப்பு எரிவாயு சிலிண்டரின் மொத்த எடை தோராயமாக 16 கிலோ எடை கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த சிலிண்டர்களில் ஃபிளாஷ் லைட் அல்லது மொபைல் ஃபோன்களில் உள்ள ஒளியைப் பயன்படுத்தி LPG அளவைக் கண்காணிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
வருடத்திற்கு எத்தனை சிலிண்டர்?
LPG இணைப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர் ஆண்டுக்கு வழக்கமான சிலிண்டரான-14.6 கிலோ எடையுள்ள சிலிண்டரை அதிகபட்சமாக 12 வரை பெறலாம். இந்நிலையில் 10 கிலோ சிலிண்டரினை வருடத்திற்கு அதிகப்பட்சமாக 17 வரை பெற இயலும் என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிக எடையுள்ள சிலிண்டர்களைத் தூக்குவதிலும், மாற்றுவதிலும் சிரமங்களை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் வயதானவர்களை மனதில் வைத்து 10 கிலோ சிலிண்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது, ஒரு சிலிண்டருக்கு 3,500 ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகையாக வசூலிக்கப்படுகிறது. இரண்டு எஃகு சிலிண்டர்களை வைத்திருக்கும் நுகர்வோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கலப்பு எரிவாயு சிலிண்டர்களுக்கு மாறலாம்” என்று ஒரு IOCL எரிவாயு ஏஜென்சியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
சனிக்கிழமையும் பள்ளி? மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்