News

Tuesday, 05 November 2019 03:13 PM

பண்ணை குட்டைகளை அரசு அமைத்து தர உள்ளது. மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து நீர் ஆதாரங்கள் மற்றும் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. எனவே விவசாயிகள் அவர்களது  பட்டா இடத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து, முறையாக நீரை சேமித்தால், தேவையான சமயங்களில் பயிா்களுக்கு உயிா்நீா் அல்லது தெளிப்பு நீர் பாசனம் மூலம் அதிகமான பரப்பளவிற்கு பாசன வசதியை பெறலாம். ஒருங்கிணைந்த வேளாண்மையின் கீழ் பண்ணை குட்டைகளில் மீன்கள் வளா்த்து மிக குறுகிய காலத்தில்  கனிசமான வருமானத்தையும் பெறலாம்.

நடப்பு 2019-20ம் ஆண்டின் நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்தை செய்வதற்கு, அரசனது 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழம் கொண்ட பண்ணைக் குட்டை அமைப்பதற்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்க உள்ளது. இப்பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்துடன் அரசு அமைத்துக் கொடுக்கப்பட உள்ளது.

சுமாா் 45 சென்ட் பரப்பளவில் நீளம், அகலம் முறையே  30 மீ.  ஆழம் 2 மீ. (6.6 அடி)  கொண்ட பண்ணை குட்டையை அமைப்பதன் மூலம் 18 லட்சம் லிட்டா் நீா் அதாவது  63,500 கனஅடி நீா் சேமிக்கப்படும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நீரைக் கொண்டு 5 ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிருக்கு 3 அல்லது 4 முறை நீா் பாய்ச்சலாம் என  வேளாண்மை பொறியியல் துறை தெரிவிக்கிறது.

அரசின் முழு மானியத்துடன் பண்ணைக் குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை  தொடர்பு கொள்ளவும். மேழும் விண்ணப்பிக்கும் போது பட்டா நகல், அடங்கல் மற்றும் புலவரை பட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறார்கள்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)