News

Wednesday, 18 November 2020 06:30 PM , by: KJ Staff

Credit : ஜனநேசன்

விவசாயம் செய்வதற்கு இன்றியமையாத மூல ஆதாரங்களில் தண்ணீரும் ஒன்று. எல்லா இடத்திலும் தண்ணீர்ப் பிரச்சனை நிலவும் நிலையில், விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. தண்ணீரை மிச்சப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது தான், சொட்டு நீர்ப்பாசனம் (Drip irrigation). இப்பாசன முறையில், தண்ணீரை அதிக அளவில் சேமிக்கலாம். சில விவசாயிகள் இப்பாசன முறையை கடைபிடித்தாலும், அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காகத் தான், விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சொட்டுநீர்ப் பாசன முறைக்கு 100% மானியம் (Subsidy) வழங்க முன்வந்துள்ளது தோட்டக்கலைத் துறை.

100% மானியம்:

தோட்டக்கலைத்துறை (Department of Horticulture) உதவி இயக்குனர் சாகுல் அமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத்தில் சொட்டு நீர்ப் பாசன முறையை ஊக்கப்படுத்தும் (Encourage) வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் (Subsidy) வழங்கப்பட உள்ளது. அதன்படி திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதியில் நன்செய் 2.5 ஏக்கர், புன்செய் 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசன குழாய்களை அமைத்து 100 சதவீதம் வரை மானிய உதவி பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

மானியம் பெற விரும்பும் விவசாயிகள், தங்களது நிலத்தின் கணினி பட்டா, குறு விவசாயி சான்றிதழ் (Minor Farmer Certificate), வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை (Aadhar Card) உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு, தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கஜா புயலின் 2-ம் ஆண்டு! 1000 பனை விதைகளை விதைப்பு!

உருளை கிழங்கில் நோய் தாக்குதல்! கவலையில் நீலகிரி விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)