திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் அட்மா (ATMA) ஆகிய திட்டங்களின் கீழ் 50 சதவிகிதம் மானிய விலையில் 100 தார்பாய்களை விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: அறுவடையின் போதும் அறுவடைக்கு பின்னும் 15 முதல் 20 சதவீதம் வரை உணவு தானியங்கள் சேமிப்பு இழப்பு ஏற்படுகிறது.
தார்பாய்கள்
அறுவடைக்கு பின் ஏற்படும் சேமிப்பு இழப்பினை தவிர்க்கவும், மழைகாலங்களில் அறுவடை (Harvest) செய்யப்படும் தானியங்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பாக சேமித்து வைக்கவும், விவசாயிகளுக்கு தார்பாய் அவசியம் இன்றியமையாதது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு 50 சதவீதம் மானிய விலையில் 1290 தார்பாய்கள் விவசாயிகளின் தேவையான அளவிற்கேற்ப விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் முதற்கட்டமாக 100 விவசாயிகளுக்கு வழங்கி துவக்கி வைக்கப்படுகிறது என்றார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் இரா.சம்பத்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபிநேசன் உள்பட விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க