தென்னை மர விவசாயிகளுக்கு நற்செய்தி ஒன்றை, வேளாண் துறை (Agriculture Department) அறிவித்துள்ளது. தென்னை மரங்கள், விவசாயத் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறதை உணர்ந்த வேளாண் துறை, தென்னை மரங்களை (Coconut Tree) பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மறுநடவுக்கு மானியம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர் வட்டாரத்தில் நோய்த் தாக்கப்பட்ட தென்னை மரங்களை பாதுகாக்கும் பொருட்டு, மறுநடவு செய்யும் யோசனையை அறிவித்து, மறுநடவு (Replant) செய்யும் ஒவ்வொரு தென்னை மரங்த்திற்கும் ரூபாய் 1,000 மானியம் (Subsidy) வழங்கப்படும் என அறிவித்துள்ளது வேளாண் துறை. இதனால், அழியும் நிலையிலுள்ள தென்னை மரங்கள் காக்கப்படும்.
தென்னங்கன்றுக்கும் மானியம்:
தென்னை மரங்களை அடுத்து, தென்னங்கன்றுகளை மறுநடவு செய்தாலும் மானியம் உண்டு என அறிவித்துள்ளது. அதாவது, தென்னங்கன்றுகளை மறுநடவு செய்தால், ஒரு கன்றுக்கு ரூபாய் 40 வீதம், 100 தென்னங்கன்றுகளுக்கு, ரூபாய் 4,000 மானியம் வழங்கப்படும். இதனை அறிந்த, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இத்திட்டத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள் பயனடையுமாறு வேளாண் துறை கேட்டுக் கொண்டது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்.
மேலும் படிக்க
நெல்லைக்கு 1330 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் வருகை!
மானியத்தோடு, காய்கனி விதைத் திட்டத்தில் சேர, தூத்துக்குடி விவசாயிகளுக்கு அழைப்பு!