News

Tuesday, 09 November 2021 01:56 PM , by: T. Vigneshwaran

Tomato Price Today

நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருவதால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்படும் நிலயில், சரக்குப் போக்குவரத்து முடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்வதால் காய்கறிகளுக்கான வரத்து குறைந்துள்ளது. இதனால் தேவை அதிகரித்து விலையும் உயரத் தொடங்கியுள்ளது. காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் சென்னை வாசிகள் பெரும் பிரச்னையில் உள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையின் நிலவரப்படி,  நேற்று 65 ரூபாயாக இருந்த தக்காளி இன்று ஒரு கிலோ அதிரடியாக 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் 150 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விலை 40 ரூபாயிலிருந்து 42 ரூபாயாக உள்ளது. அதேபோல, அவரைக்காய் விலை 55 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிலோ கேரட் 65 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 75 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது.

இன்றைய காய்கறி விலைப் பட்டியல்- Today's vegetable price list

தக்காளி விலை - ரூ.100

வெங்காயம் விலை - ரூ.42

அவரைக்காய் விலை - ரூ.80

பீன்ஸ் விலை - ரூ.50

பீட்ரூட் விலை - ரூ.30

வெண்டைக்காய் விலை - ரூ.70

உருளைக் கிழங்கு விலை - ரூ.35

முள்ளங்கி விலை - ரூ.40

புடலங்காய் விலை - ரூ.25

சுரைக்காய் விலை - ரூ.30

பாகற்காய் விலை - ரூ.35

கத்தரிக்காய் விலை - ரூ.50

குடை மிளகாய் விலை - ரூ.120

கேரட் விலை - ரூ.65

காளிபிளவர் விலை - ரூ.40

சவுசவு விலை - ரூ.15

தேங்காய் விலை - ரூ.32

வெள்ளரிக்காய் - ரூ.15

முருங்கைக்காய் - ரூ.75

இஞ்சி - ரூ.60

பச்சை மிளகாய் - ரூ.30

கோவைக்காய் - ரூ.60

மேலும் படிக்க:

இனி வாங்க முடியாது தங்கம், விலையில் திடீர் மாற்றம்

பல உயிர்களை பறித்த கனமழை! திமுக அரசு தோல்வி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)