News

Tuesday, 26 January 2021 01:58 PM , by: Daisy Rose Mary

Credit : The Better India

முதுமையிலும் இளமை தவழும் அழகாய் விவசாயத்தில் அசத்தி சாதனைகள் பல படைத்து வருகிறார் இந்த மூதாட்டி பாப்பம்மாள். 105 வயதிலும் இரும்பு பெண்மணியாய் உழைத்து விவசாயம் செய்து வரும் அவருக்கு நம் அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். தேக்கம்பட்டி கிரமத்தில் வசித்து வரும் இந்த பாட்டிக்கு 105 வயதாகிறது. இப்பொழுதும் இரும்பு பெண்மணியாய் விவசாயம் செய்து உழைத்து வருகிறார். முகத்தில் அழகான சுருக்கம், உதட்டின் ஓரம் எப்பொழுதும் தாண்டவமாடும் எளிய புன்னகை.

ஆரோக்கியத்தின் ரகசியம்

20 வயதிலேயே திருமணம் செய்துகொண்ட பாப்பம்மாள், ஒரு பக்கம் ஹோட்டல், மறுபக்கம் விவசாயம் என வாழ்ந்து வந்துள்ளார். இவர் சிறு வயதில் இருந்தே தினமும் ராகி, கம்பு, சோளம், வரகு, சாமை போன்ற உணவுகளை தான் உணவாக சாப்பிடுவார்களாம். பண்டிகை காலம் வந்தால் மட்டுமே அரிசி பொங்கி சாப்பிடுவோம். அதுவும் ஒரு வேளை தான் சாப்பிடுவோம் என்று அவரது ஆரோக்கியத்தின் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். இப்பொழுது சாப்பிடும் பொழுது கூட இரண்டு இட்லி, ஒரு தோசை போல அளவாக சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.

அரசியலும் அத்துப்படி

பாப்பம்மாள் பாட்டிக்கு விவசாயம் மட்டும் அல்ல அரசியலும் அத்துப்படியாம். அது மட்டும் இல்லாமல் அவருக்கு கலைஞர் கருணாநிதி என்றால் மிகவும் பிடிக்குமாம். கலைஞரை சந்திப்பதற்குள் அவர் தவறிவிட்டார் என்று மிகவும் வருத்தப்பட்டார். இருப்பினும் ஸ்டாலினை சந்தித்து நமது கட்சியை வளர்க்க நான் அரும்பாடுபடுவேன் என்று உறுதிமொழி அளித்துள்ளார். பாப்பம்மாள் அக்ரி விவாத குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இத்தகைய சாதனை படைத்த தமிழ் பாட்டி பாப்பம்மாளுக்கு நமது அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

மேலும் படிக்க...

தை பிறந்தால் வழி பிறக்கும் - இந்த தை பட்டத்திற்கான பயிர்கள் விபரம்!

அறிமுகம் செய்யப்பட்டது டிஜிட்டல் வாக்காளர் அட்டை !!

வேலையில்லாதவருக்கு அரசின் உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)