1.ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு மகிழ்ச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும், அதனை தடை செய்ய இயலாது என இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனால் தமிழக ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரர்கள்
மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் உட்பட பல முக்கிய அமைச்சர்களை இந்த தீர்ப்பினை ஆதரித்துள்ளனர்
2.அஞ்சல் துறையின் மூலம் 19 டன் மாம்பழங்கள் ஹோம் டெலிவரி
விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கடந்த ஒரு மாதத்தில் அஞ்சல் துறையின் மூலம் 19 டன் மாம்பழங்கல் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரை மாம்பழ சீசன் களைக்கட்டும். ஆனால் இந்த ஆண்டு நிலவும் அதிகப்பட்ச வெப்பநிலையால் பல மாநிலங்களில் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும் கர்நாடக மாநிலத்தில் இந்திய அஞ்சல் துறை மூலம் 19 டன் மாம்பழங்கள் ஹோம் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தப்போதிலும், தற்போது வரை டெலிவரி செய்யும் அளவானது திருப்திகரமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3.வரும் 29ம் தேதி விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும் 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டில் இஸ்ரோ ஏவும் 3வது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
4.1.08 லட்சம் கோடி உர மானியம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!
காரீப் பருவ காலத்தில் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு, ஒரு இலட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் உர மானியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நடப்பு காரீப் பருவ காலத்தில் யூரியா உரத்திற்கு 70,000 கோடி ரூபாயும், டிஏபி உரத்திற்கு 38,000 கோடி ரூபாயும் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
5.திரிபுராவின் ஆர்கானிக் அன்னாசிப்பழத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர்
தில்லியில் இன்று ஆர்கானிக் அன்னாசிப்பழத்தை அறிமுகப்படுத்திய மாண்புமிகு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியே இந்திய அரசு, திரிபுரா மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் முன்னுரிமை என்று கூறினார்.
மேலும் படிக்க
Aavin: ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு!
சூரிய சக்தியில் விவசாய பணிக்காக வாகனம்- 11 ஆம் வகுப்பு மாணவி சாதனை