தமிழகத்தில் தினசரிக் கொரோனா வைரஸ் பாதிப்பு 24,000த்தை நெருங்கியிருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிர வைத்தக் கொரோனா
கடந்த 2 ஆண்டுகளாக நாம் கொரோனா பாதிப்பில் இருந்துவந்தாலும், நவம்பர் மாதம் சற்று ஓய்ந்திருந்தது என்றே சொல்லலாம். ஆனால் டிசம்பர் மாதம் உருமாறி ஒட்டிக்கொண்ட ஒமிக்ரான், உலக நாடுகளை அதிர வைத்தது.
இந்தியாவிலும் மெதுவான நுழைந்த ஒமிக்ரான், தற்போது கொரோனா 3-வது அலையாக அசுரவேகத்தில், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு மாத காலத்திற்குள் பல மாநிலங்களைப் பதம்பார்த்து வருகிறது.
ஒமிக்ரான்
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் ஆயிரத்தில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது, 24 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. இந்த பாதிப்பு அதிகரிப்பு, அரசுக்கு பெரும் தலைவலியாகவே மாறியிருக்கிறது.
அரசும், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு எனக் கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இருப்பினும் பாதிப்புக் குறைந்தபாடில்லை.
அதாவது ஜனவரி 15ம் தேதி தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பாதிப்பு 23,989 ஆக உயர்ந்துள்ளது.
23,989
இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 15 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 10,988 பேர் மீண்டுள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 36,967 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 9,026 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை (Chennai)
சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 8,978 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 8,963 ஆக இருந்த பாதிப்பு 8,978 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!
3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!