பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 February, 2021 3:09 PM IST
Credit : DNA india

நிவர் மற்றும் புரெவி புயல்களைத் தொடந்து ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் பெய்த கன மழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 11.43 லட்சம் விவசாய பெருமக்களுக்கு, ரூ.1,116.97 கோடி இடுபொருள் நிவாரணமாக மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி வழங்கப்படும். இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயலானது 25.11.2020 மற்றும் 26.11.2020ல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு புரெவி புயலின் தாக்கத்திற்கு உள்ளானது.

தமிழக அரசு சார்பில் ரூ600 கோடி

முன்னதாக, ‘நிவர்’ புயலின் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், 80 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, நிவர் மற்றும் புரெவி புயல்களின் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், வேளாண்பெருமக்கள் அதிக உற்பத்தி செலவு செய்து, பேரிடரால் பெரும்பாதிப்பு அடைந்துள்ளதை கருத்தில் கொண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வழங்க வேண்டிய இடு பொருள் நிவாரணத் தொகையினைக் காட்டிலும் கூடுதலாக வழங்கப்பட்டது. 

இடு பொருள் நிவாரணத்தொகை அதிகரிப்பு

மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் எக்டேர் ஒன்றுக்கு 20,000/- ரூபாயும், மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக எக்டேர் ஒன்றுக்கு 10,000/- ரூபாயும், பல்லாண்டு கால பயிர்களுக்கு (perennial crops) இடுபொருள் நிவாரணத் தொகையாக எக்டேர் ஒன்றுக்கு 25,000/- ரூபாய் என உயர்த்திவழங்கவும், பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கு அதிகபட்சமாக 2 எக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ள நிலையில், 2 எக்டேர் என்ற உச்சவரம்பை தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் நான் ஆணையிட்டேன்.

அந்த ஆணையின் அடிப்படையில்,பாதிப்பிற்குள்ளான 2.96 இலட்சம் எக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 598.05 கோடி ரூபாய் நிவாரணமாக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, இதுவரை 543.10 கோடி ரூபாய் சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, விவசாயிகளின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

அதிகரித்த மழையளவு

மேலும், நடப்பு ஜனவரி மாதத்தில் 16.01.2021 வரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவான 12.3 மில்லி மீட்டரை விட மிக அதிகமாக 136.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 1108 விழுக்காடு கூடுதலானது ஆகும். குறிப்பாக தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், முன் எப்பொழுதும் இல்லாத நிகழ்வாக, 24 மணி நேரத்தில், 9 செ. மீ. முதல் 25 செ. மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பெய்த அதிகப்படியான மழையினைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கு நான் உத்தரவிட்டதோடு, மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்களையும் தொடர்புடைய மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பிவைத்தேன். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, உணவு, குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நான் ஏற்கனவே ஆணையிட்டதன் அடிப்படையில், மாவட்ட நிருவாகத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உயிர்சேதம் மற்றும் கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைத் தொடர்ந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் 734.49 கோடி ரூபாயும், கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க 166.33 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 900.82 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

ஜனவரி மழை பாதிப்பு

ஜனவரி மாதத்தில் பெய்த கன மழை மற்றும் மிக கன மழையின் காரணமாக, 6,62,689.29 எக்டேர் வேளாண் பயிர்களும், 18,644.94 எக்டேர் தோட்டக்கலைப் பயிர்களும், ஆக மொத்தம் 6,81,334.23 எக்டேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 எக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

மத்திய அரசின் நிதியுதவி வந்ததும் நிவராணம்

இதன்படி, ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் பெய்த கன மழையின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 6,81,334.23 எக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 11.43 லட்சம் விவசாய பெருமக்களுக்கு, 1,116.97 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணமாக மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி வழங்கப்படும். இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம், மத்திய குழுவும் வரும் பிப்ரவரி மாதம் 3, 4 மற்றும் 5 தேதிகளில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை பார்வையிடவும் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

அதிக மகசூல் பெற அற்புதமான வழி- விபரம் உள்ளே!

பயிர்க்கடன் நிறுத்தம் இல்லை - விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பயிர்களைப் பாதுகாக்க உதவும் சூரிய சக்தி மின்வேலி- 50% மானியம் தருகிறது அரசு!

English Summary: 11 lakh farmers will soon get Relief fund for the crops affected by the continuous rains says Tamil Nadu Chief Minister Edappadi K. Palanisamy
Published on: 01 February 2021, 03:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now