இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 1,17,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓயாத ஒமிக்ரான்
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான், நுழைந்த ஒரு மாதத்திலேயே 100க்கும் மேற்பட்ட நாடுகளைப் பதறச் செய்தது. அந்த வரிசையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல், மக்களை அச்சத்தின் பிடியில் சிக்க வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ஒருபுறம், பாதிப்புகளின் உச்சம் மறுபுறம் என மக்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர்
இந்நிலையில் ஒமைக்ரான் வருகைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த 5 நாட்களாக தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.
படிப்படியாக அதிகரிப்பு (Gradual increase)
ஜனவரி5ம் தேதி 58 ஆயிரத்து 97 பேராக இருந்தக் கொரோனா ருக்கு பாதிப்பு , 6ம் தேதி கிட்டத்த 91 ஆயிரம் பேருக்கு உறுதியானது. இதன் தொடர்ச்சியாக 7ம்தேதி புதிதாக 1.17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 6ம் தேதியின் பாதிப்பை விட 28 சதவீதம் அதிகமாகும்.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,52,26,386 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்றுப் பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ் (Discharge)
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 30,836 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,71,845 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி (Vaccine)
மேலும் கொரோனா தொற்றுக்கு 3,71,363 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,49,66,81,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...