1.1,267 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1,267 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 424 விவசாயிகளிடமிருந்து 1,267 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2. காக்கடா ரூ.500 க்கு ஏலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு விவசாயிகள் 1½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.525-க்கும், முல்லை ரூ.280-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.34-க்கும், பட்டுப்பூ ரூ.41-க்கும், கனகாம்பரம் ரூ.325-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது.
3.12 1/2 லட்சம் ரூபாய்க்கு நாட்டுச்சக்கரை ஏலம்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடந்தது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,111 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் 60 கிலோ மூட்டை முதல் தர திடம் நாட்டு சர்க்கரை 2 ஆயிரத்து 555 ரூபாய்க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 470 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் ஏலம் போனது.
மொத்தம் 501 மூட்டைகள் 30 ஆயிரத்து 60 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை 12 லட்சத்து 49 ஆயிரத்து 990 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டது.
4.இஸ்ரோ தலைவர் சோமநாத் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நிலை குறித்து தகவல்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக அடுத்தாண்டு பிப்ரவரியில் ஆளில்லா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படும்.
பி.எஸ்.எல்.வி. சி-55 வெற்றியை அடுத்து இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்.
5.செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் பாடங்களைச் சேர்க்க தமிழக பொறியியல் கல்லூரிகள் ஆர்வம்
செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் பாடங்களைச் சேர்க்க தமிழக பொறியியல் கல்லூரிகள் ஆர்வம்
வரும் கல்வியாண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் 8,500 இடங்களை அதிகரிக்கத் திட்டம்
6.அட்சயத் திருதியையொட்டி சென்ற ஆண்டைவிட 25 சதவீதம் கூடுதலாக நகைகள் விற்பனை
அட்சயத் திருதியையொட்டி சென்னையில் கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் கூடுதலாக நகைகள் விற்பனையாகி இருப்பதாக நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சித்திரை மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் திருதியை தினத்தன்று எந்த பொருளை வாங்கினாலும், ஆண்டு முழுவதும் அந்தப் பொருள் அதிகமாக சேரும் என்பது நம்பிக்கை.
அதன்படி சனிக்கிழமை அட்சய திரிதியையொட்டி நகைக் கடைகளில் நகைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
மேலும் படிக்க
கொரோனாவிலிருந்து நம்ம தப்பிச்சதுக்கு இட்லியும், டீயும் தான் காரணமா?