தமிழக வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் உழவர் சந்தைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உழவர் சந்தை
சந்தைகளில் காய்கறிகள் (Vegetables) கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகள் எட்டாக் கனியாக இருந்து வந்தது. இடைத்தரகர்கள் இன்றி தங்களது விளைப் பொருள்களை விவசாயிகள் நேரடியாக பொது மக்களிடம் விற்று பயன் பெறுவதகாக, 1999-ம் ஆண்டு மதுரையில் முதல் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
மற்ற காய்கறி கடைகளின் விலையை விட, உழவர் சந்தையில் விலை குறைவாக விற்கப்பட்டதால், பெரும்பாலானோர் உழவர் சந்தைகளை நாடத் தொடங்கியதால், நல்ல வரவேற்பை பெற்ற திட்டமாக உருவெடுத்து, தற்போது வரை செயல்பட்டு வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் சுமார் 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ‘முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் (Stalin) பொறுப்பேற்ற பிறகு, மக்கள் எதிர்பாரத பல சலுகைகளையும் வழங்கி வருகிறார். திமுக ஆட்சியில் கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டை நினைவு கூறும் விதமாக, 2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது 8 கோடி செலவில், செம்மொழி பூங்காவை உருவாக்கினார். தற்போது, இது போன்ற பூங்காங்களை தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்!
சொட்டுநீர்ப் பாசன கருவிக்கு 100% மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!