உத்தர பிரதேசத்தில் தோட்டக்கலை வல்லுநர்கள் நடத்திய பரிசோதனையின் விளைவாக, ஒரே மாமரத்தில் 121 வகை மாம்பழங்கள் (Mangoes) காய்த்துள்ளன. விவசாயத்தில் இது புதிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது.
121 வகை மாம்பழங்கள்
உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள மாமரம் ஒன்றில், பல வகையான மாம்பழங்களை வளர்க்க ஐந்து ஆண்டுகளாக, தோட்டக்கலை வல்லுநர்கள் சில சோதனைகளை (Testing) செய்து வந்தனர். இந்த பரிசோதனையின் விளைவாக, அந்த மாமரத்தில் தற்போது 121க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் வளர்ந்துள்ளன.
மாம்பழ வகைகள்
தசேரி, லாங்க்ரா, சவுன்சா, ராம்கேலா, அம்ரபல்லி, சஹாரன்பூர் அருண், சஹாரன்பூர் வருண், சஹாரன்பூர் சவுரப், சஹாரன்பூர் கவுரவ் மற்றும் சஹாரன்பூர் ராஜிவ் உள்ளிட்ட மாம்பழ வகைகள் வளர்ந்து வருகின்றன. லக்னோ சபேடா, புசா சூர்யா, ரதாவல், கால்மி மால்டா, பாம்பே, ஸ்மித், மாங்கிபெரா ஜலோனியா, கோலா புலந்த்சாகர், லாரன்கு, அலம்பூர் பெனிஷா மற்றும் அசோஜியா தியோபாண்ட் உள்ளிட்ட மாம்பழ வகைகளும் வளர்ந்துள்ளன.
இதுகுறித்து தோட்டக்கலை பயிற்சி மைய இணை இயக்குனர் பானு பிரகாஷ் ராம் கூறியதாவது: பல்வேறு வகையான மாம்பழங்களை ஆராய்ச்சி செய்வதே எங்கள் பரிசோதனையின் நோக்கமாக இருந்தது.
அதன்படி மாம்பழ உற்பத்தியில் (Mango Production) முன்னணியில் உள்ள சஹாரன்பூரில் அதற்கான ஆய்வை மேற்கொண்டோம். அங்குள்ள ஒரு மாமரத்தின் கிளைகளில், வேறு வகை மாமரங்களின் கிளைகளை நட்டு வைத்தோம். அதை தொடர்ந்து பராமரித்து வர, சிறப்பு அதிகாரி ஒருவரையும் நியமித்தோம். தற்போது அதில், 121 வகை மாம்பழங்கள் வளர்ந்துள்ளன என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வாசனைப்பயிர்களின் மேம்பாட்டிற்காக தலைச்சிறந்த செயல்பாட்டு மைய விருது!
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!