News

Thursday, 17 September 2020 04:40 PM , by: Elavarse Sivakumar

மரம் தங்கசாமியின் நினைவு நாளை யொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் மூன்றே நாட்களில் 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் மரம் தங்கசாமி. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். தொடக்கத்தில் இருந்து ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளில் கரம்கோர்த்து செயலாற்றிய அவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி காலமானார்.

அவரது சேவையை நினைவு கூறும் விதமாக காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக, செப்.14, 15, 16 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட்டன.

1.26 லட்சம் மரக்கன்றுகள் (1.26 lakh saplings)

இதன்மூலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 331 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நட்டுள்ளனர்.

மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று வழங்கினர்.

மகன் பங்கேற்பு (Son Participated)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மரம் நடும் விழாவில் மரம் தங்கசாமி ஐயாவின் மகன் திரு.கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேலும் படிக்க...

மாடித் தோட்டம் அமைக்க விருப்பமா? 18ம் தேதி ஆன்லைனில் பயிற்சி!

அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் தடை- மத்திய அரசு அதிரடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)