மரம் தங்கசாமியின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 1.26 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி, தம் வாழ்நாள் முழுவதையும் மரம் வளர்ப்பில் அர்ப்பணித்தவர். தேக்கு, பாக்கு உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை தனது நிலத்தில் நட்டினார்.
அதனால் அவரது வீடே தற்போது குட்டிக்காட்டிற்குள் காட்சியளிக்கிறது. மரம் தங்கசாமியின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைபெற உள்ளன.
1.26 லட்சம் மரக்கன்றுகள் (1.26 lakh saplings)
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தர்மபுரி, கோவை, கரூர், நாமக்கல், சேலம் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 331 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் 1 லட்சத்து 26 ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளன.
விவசாயிகள் ஆர்வம் (Farmers are interested)
அனைத்தும் முழுக்க முழுக்க விவசாயிகளின் நிலங்களில் நடப்பட உள்ளன. குறைந்தப்பட்சம் 450 மரங்கள் முதல் அதிகப்பட்சமாக 15 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட உள்ளனர். விலைமதிப்புமிக்க டிம்பர் மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு, சுற்றுச்சூழலும் தானாக மேம்படும்.
தொழில்நுட்ப ஆலோசனைகள் (Technical advice)
அனைத்து மரக்கன்றுகளையும் விவசாயிகள் ஏற்கனவே ஈஷா நர்சரிகளில் இருந்து எடுத்து சென்றுள்ளனர். மரம் நடும் நிகழ்வின்போது விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று வழங்க உள்ளனர். புதுக்கோட்டையில் நடக்கும் விழாவில் மரம் தங்கசாமி ஐயாவின் மகன் திரு. கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
83 லட்சம் மரக்கன்றுகள் (83 lakh saplings)
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 83 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுவது இனி ரொம்ப ஈஸி- விபரம் உள்ளே!
கனமழையில் சிக்கிச் சிதறிய நெற்பயிர்கள் - அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் குமரி விவசாயிகள்!