சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்ததை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், விவசாயிகளுக்கு ஆதரவாக அருமையான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இன்று வழங்கியுள்ளது. சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு (Relief fund) வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இழப்பீடு:
திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தின்அதிரடி தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீட்டுத் தொகையை வருகின்ற மே 31 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாயப்பட்டறை கழிவுகளால், நொய்யல் ஆறு மாசடைந்து, விவசாயத்திற்கு பாசன வசதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, அப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்!