News

Friday, 16 July 2021 06:39 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறாத நிலையில், வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் (Mark List) வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அனைவரும் தேர்ச்சி

பிளஸ்-2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது. அந்தவகையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

10-ம் வகுப்பு தேர்வில் 50%, 11-ம் வகுப்பில் 20%, 12-ம் வகுப்பு செய்முறை தேர்தவில் 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகி உள்ளது.

மதிப்பெண்கள் வெளியீடு

இந்நிலையில் வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in இணையதளங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதைப்போல மாணவர்கள் பள்ளியில் சமர்பித்த அலைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22.07.2021 அன்று காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில், மாணவர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)